முகப்பு
தமிழ்மணி

கோசலை மாண்பு

அ யோத்தி மக் கள் ராம னுக்கு முடி சூட்டு விழா என்று வள் ளு வன் பறை ய றைந் தது கேட்டு மகிழ்ச்சி வெள் ளத் தில் திளைத் தார் கள். முதிய பெண் ம ணி கள் கோச லை யைப் போல வும், வேதம் வல்ல அந் த ணர் கள் வசிட் ட

Updated On : 20 செப்டம்பர், 2012 at 2:53 PM
பகிர்:
Updated On : 25 டிசம்பர், 2023 at 10:07 PM

அ யோத்தி மக் கள் ராம னுக்கு முடி சூட்டு விழா என்று வள் ளு வன் பறை ய றைந் தது கேட்டு மகிழ்ச்சி வெள் ளத் தில் திளைத் தார் கள். முதிய பெண் ம ணி கள் கோச லை யைப் போல வும், வேதம் வல்ல அந் த ணர் கள் வசிட் ட னைப் போல வும், மண மான இளம் பெண் கள் சீதை யைப் போல வும், சீதை திரு ம க ளைப் போல வும், அவ் வூ ரில் வாழ்ந்த ஆன்று அவிந்து அடங் கிய சான் றோர் கள் தய ர த னைப் போல வும் மகிழ்ச் சி யான மன நி லை யில் இருந் தார் கள். இதனை,

மாதர் கள் கற் பின் மிக் கார்

கோ சலை மனத்தை ஒத் தார்;

வேதி யர் வசிட் டன் ஒத் தார்;

வே றுள மக ளிர் எல் லாம்

சீதையை ஒத் தார்; அன் னாள்

தி ரு வினை ஒத் தாள்; அவ் வூர்ச்

சாதுகை மாந் தர் எல் லாம்

த ய ர தன் தன்னை ஒத் தார்

என்று அழ காக விளக் கி யுள் ளார் கம் பர்.

÷ஒவ் வொரு கம் பர் பாட் டை யும் சுண் டிப் பார்த்து "இது கம் பன் பாட்டு' "இது கம் பன் பாட்டு அன்று' என்று விளக் கி ய வர் ரசி க மணி டி.கே.சி. அவர் சொல் லும் திருத் தங் கள் எல் லா வற் றை யும் ஏற் றுக் கொள்ள இய லாது என் பது அறி ஞர் உல கம் அறிந்த உண்மை. ஆயி னும் சில பாடல் க ளுக்கு அவர் செய் துள்ள திருத் தங் கள் நம் மைச் சிந் திக்க வைக் கின் றன. இப் பாட் டில் இரு திருத் தங் களை ரசி க மணி டி.கே.சி. செய்து, தமது "கம் பர் தரும் ராமா ய ணம்' முதற் பா கத் தில் வெளி யிட் டுள் ளார். "மாதர் கள் கற் பின் மிக் கார்' என் ப தற்கு மாறாக, "மாதர் கள் ஆண் டின் மிக் கார்' என் பது முதல் திருத் தம். "சாதுகை மாந் தர் எல் லாம்' என் ப தற்கு மாறாக, "சாதன மாந் தர் எல் லாம்' என் பது இரண் டா வது திருத் தம். இவற் றில் இரண் டா வது திருத் தம் அவ் வ ளவு பொருத் த மாக அமை ய வில்லை. மகா வித் து வான் மே.வீ.வேணு கோ பா லப் பிள்ளை, "திரு ம ழி சைப் பி ரா னின் நான் மு கம் திரு வந் தா தி யில் உள்ள,

"சாது வ ராய்ப் போது மின் கள்' என் றான் நம னும் தன்

தூது வ ரைக் கூவிச் செவிக்கு' (68)

என் னும் வெண் பா வைக் காட்டி, "சாதுகை மாந் தர்' என் பது "சாதுவ மாந் தர்' என்று இருத் தல் வேண் டும் என்று குறித் துள் ளார். இது நல்ல பாட மா கத் தோன் று கி றது.

÷மு தல் திருத் தம் ரசி க ம ணி யின் அறிவு நுட் பத் தைக் காட் டு கி றது. கோசலை கற் பில் சிறந் த வள் என் பது உண் மையே. ராமன் அவ் வன் னையை, "அருங் கற் பி னோய்' (1619) என்று விளித் துப் பேசு கி றான். கம் பர் அவ ளைக் "கற் பு றுத் திய கற் பு டை யாள்' (1620) என்று குறிக் கி றார். ஆனால் ராம னுக்கு முடி சூட்டு விழா என் ப தைக் கேட் டுக் கோச லை யைப் போல மகிழ் வ தற் கும் கற் பொ ழுக் கத் திற் கும் என்ன தொடர்பு இருக் கி றது?

÷இங்கு மாதர் கள் கற் பைப் பற் றிய பேச்சு வேண் டா த தாக அமை கி றது. அத னால் அவர் "ஆண் டின் மிக் கார்' என்று திருத் தம் செய் தார். நீதி பதி மக ரா ஜன், தென் மா வட் டத் தில் கிடைத்த ஓர் ஏட் டுச் சு வ டி யில் "ஆண் டின்' என் ப தற்கு மாறாக "வய தின்' என் னும் பாடம் காணப் பட் ட தா கத் தம் கட் டுரை ஒன் றில் தெரி வித் துள் ளார். இத் தி ருத் தங் க ளின் பொருத் தத்தை அறு தி யி டக் கோச லை யின் பண் பு ந ல னைப் பற் றிய தெளிவு துணை பு ரி யும்.

÷கோ சலை மற்ற பட் டத் த ர சி க ளைப் போல அரச குடும் பத் தில் பிறந் த வள். கோசல மன் ன னின் மகள் கோசலை என் றும், மக த நாட் ட ர சன் மகள் சுமித் திரை என் றும், கேக ய நாட்டு மன் ன னின் மகள் கைகேயி என்று இரகு வம் சம் (சருக் கம்- 11,17) தெரி விக் கி றது.

÷கோ சலை நான்கு பிள் ளை க ளை யும் "தன் பிள்ளை இவன்', "மற் ற வர் பிள் ளை கள் இவர் கள்' என் னும் எண் ண மின்றி எல் லோ ரை யும் சம மா கக் கரு தி னாள். அவளை மற்ற இரு வ ரி ட மி ருந்து பிரித் துக் காட் டும் பண்பு அவள் பிள் ளை க ளி டம் கொண்ட அள வற்ற அன்பு ஆகும். கம் பர் அவளை, "நால் வர்க் கும் மறு வில் அன் பி னில் வேற் றுமை மாற் றி னாள்'(1609) என்று குறிக் கி றார்.

÷கோ ச லை கேக யத்தி லி ருந்து திரும் பிய பர த னி டம் கைகே யி யின் வஞ் ச னையை அறி யாயோ என்று வின வி னாள். அவன் அது கேட் டுக் குமு றி னான். "யான் அவ் வஞ் ச னையை அறிந் தி ருந் தால் பற் பல தீமை கள் செய்த பாவத்தை அடை வ தற் கு ரி ய வன் ஆவேன்' என்று சூளு ரைத் தான்.

÷அ வன் கூறி ய வற் றைக் கேட் டுக் காட் டுக் குச் சென்ற ராமன் திரும்பி வரக் கண் ட து போல மகிழ்ந்து அன் பி னால் அழுது அவ னைத் தழு விக் கொண் டாள். அவள் மார் ப கத்தி லி ருந்து பால் உக, விம்மி விம்மி அவ னோடு பேசி னாள் என் கி றார் கம் பர்.

÷இத் த கைய தன்மை தாயன்பு மிக் க வர் க ளி டம் காணப் ப டு வது ஒன் றா கும். திரு ஞா ன சம் பந் த ரைக் கண்ட மங் கை யர்க் க ர சி யார் இத் த கைய நிலை யினை அடைந் தார் என் கி றார் சிவப் பி ர கா சர் தம் மு டைய "நால் வர் நான் மணி மாலை'யில்.

÷ இத னால் அன் பின் மிக்க மாதர் கள் கோசலை மனத்தை ஒத் தார் கள் என்று கூறு வதே பொருத் த மாக அமை யும். அன்பு என் ப தனை அற்பு என்று வழங் கு வது பொது வா கக் கவி ஞர் க ளி டம் சிறப் பா கக் கம் ப ரி ட மும் காணப் ப டும் போக்கு ஆகும்.

""அற் பின் நின் றன அறங் கள்; அன் ன வர்

கற் பின் நின் றன கால மாரியே''                                        (90)

""அற் பின் நல் திரை பு ரள் ஆசை வேலை யி னான்''           (3344)

""தற் பி ரிந்து அருள் புரி தரு மம் போலியை

அற் பின் அத் தலை வ னும் அமைய நோக் கி னான்''      (10011)

என்று சில இடங் க ளில் அன் பினை அற்பு என்று குறித் துள் ளார். இவ் வி டங் க ளில் எல் லாம் எதுகை நோக்கி அவ் வாறு அமைந் துள் ளன. இப் பாட லில் எதுகை நோக்கி அவ் வாறு அமை யா மல் ஓசை யின் பம் நோக்கி அவ் வாறு அமைந் துள் ளது.

÷மு த ல டி யின் பிற் பாதி "கோசலை மனத்தை ஒத் தார்' என்று வல் லொற் றுப் பெற்று வரு வ தால் அதற் கேற்ப வல் லோசை அமைந் தால் இனி மை ப யக் கும் என் ப தால் அற் பின் என்று பெய் துள் ளார்.

பாட வே று பா டு கள் பெரும் பா லும் ஓர் எழுத் தைப் பிறி தோர் எழுத் தா கக் கொள் வ தால் நிகழ் வன. அத னி னும் குறை வாக ஒரு சீருக்கு மாறாக மற் றொரு சீரி னைப் பெய் வ தா லும், அத னி னும் மிகக் குறை வாக ஓர் அடிக்கு மாறாக வேறோர் அடி யினை மற தி யால் அமைப் ப தா லும் நேரி டு கின் றன.

÷எ ழுத்து மாற் றத் தால் ஏற் ப டும் பாட வேறு பா டு கள் மிகு தி யும் ஏட் டில் உள்ள எழுத் தி னைத் தவ றா கக் கொள் வ தால் நிகழ் வ ன வா கும். இப் பாட் டில் "மாதர்க ளற் பின்' என் ப தைத் தவ றாக "மாதர் கள் கற் பின்' என்று படித் த தால் பிழை நேர்ந் துள் ளது.

ரசி க மணி "கற் பின்' என் பது பிழை என்று கண் ட றிந் தார், நோய் முதல் நாடி அறி யும் தேர்ந்த மருத் து வர் போல. ஆனால், அதற்கு மாற் றாக அவர் பரிந் து ரைத்த மருந்து வீரி யம் மிக் க தாக இல்லை. நோய் கண் ட றிந்து சொன்ன மருத் து வ ரைப் போற்றி, அப் பாட் டினை,

மாதர் கள் அற் பின் மிக் கார்

கோசலை மனத்தை ஒத் தார்;

வேதி யர் வசிட் டன் ஒத் தார்;

வேறுள மக ளிர் எல் லாம்

சீதையை ஒத் தார்; அன் னாள்

திரு வினை ஒத் தாள்; அவ் வூர்ச்

சாதுவ மாந் தர் எல் லாம்

தய ர தன் தன்னை ஒத் தார்.

என்று படித்து மகிழ் வோ மாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.