கம்பர் காலம் - தெளிவு வேண்டும்!
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆண்டு, 10-ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் (பக்.56) "கம்பரது காலம் கி.பி. 12. சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி ஆகியோர் இவர் காலத்
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆண்டு, 10-ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் (பக்.56) "கம்பரது காலம் கி.பி. 12. சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி ஆகியோர் இவர் காலத்துப் புலவராவர்' (ஒüவையாரையும் சேர்ப்பது வழக்கம், ஏனோ விட்டுவிட்டனர்) என்று உள்ளது.
கம்பர் காலம் கி.பி. 9 என அண்மைக்கால ஆராய்ச்சி அறிஞர் மு.அருணாசலம் முதலியோர் ஆய்ந்து கூறியுள்ளனர். வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவபண்டாரத்தார் எழுதி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1974-இல் வெளியிட்டுள்ள, "பிற்காலச் சோழர் வரலாறு' நூல் பக்.351-இல் பின்வரும் செய்தி இடம் பெற்றுள்ளது.
""இனி நம் குலோத்துங்கன் 2 (1133-1150) காலத்தில்தான் புகழேந்திப் புலவர், சேக்கிழாரடிகள், கம்பர் ஆகிய புலவர் பெருமக்கள் இருந்தனன் என்று ஆராய்ச்சியாளருள் சிலர் எழுதியுள்ளனர். (பட்ங் ட்ர்ப்ஹள் ஸ்ர்ப்.11,ல்.75) அன்னோர் கருத்து உறுதி பெறுதற்குத் தக்க சான்றுகள் இன்மையின் அதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
1. புகழேந்திப் புலவர் முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக் காலமாகிய கி.பி. 10-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்,
2. சேக்கிழாரடிகள் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியின் முற்பகுதியிலும் (கி.பி.1178-1218),
3. கம்பர் உத்தமசோழன் ஆட்சிக் காலத்திலும் (கி.பி.970-985), இருந்தவர்கள் என்பது ஆராய்ச்சியால் புலப்படுகிறது. ஆகவே, அப்புலவர் பெருமான்கள் மூவரும் வெவ்வேறு காலங்களில் நம் தமிழகத்தில் வாழ்ந்தோராவர்.
இப்பாட நூலில் இடம்பெற்றுள்ள இக்கருத்தை அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து அடுத்த பதிப்பில் இக்குறையை நீக்கவேண்டும்.
கம்பருடைய காலம் குறித்து முனைவர் இரா.வ.கமலக்கண்ணன் முன்வைக்கும் இந்தத் தரவுகள் தொடர்பாக, தமிழறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து தக்க சான்றுகளுடன் கூடிய கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. ஐந்து நாள்களுக்குள் வரும் கட்டுரைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கம்பருடைய காலம் குறித்து முனைவர் இரா.வ.கமலக்கண்ணன் முன்வைக்கும் இந்தத் தரவுகள் தொடர்பாக, தமிழறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து தக்க சான்றுகளுடன் கூடிய கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. ஐந்து நாள்களுக்குள் வரும் கட்டுரைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.