தமிழ்மணி

மயங்கொலிச் சொற்கள்

(ர, ற பொருள் வேறுபாடு)

தினமணி

(ர, ற பொருள் வேறுபாடு)

தேரி - மணல் திட்டை, மணல் குன்று

úதறி - தேர்ச்சி பெற்று, தெளிந்து

நரை - நரைமுடி, வெண்மயிர், மூப்பு, எருது, கவரிமா, மரச்சொத்தை, பெருமை

நறை - தேன், சாதிக்காய், கள், வாசனை, நறும்புகை, பச்சிலைக்கொடி, குற்றம்

நாரி - பெண், பார்வதி, வாசனை, கள், சேனை, பன்னாடை, தேன்,

நாறி - கற்றாழை

நிருத்தம் - கூத்து, நடனம், பதம் பிரித்துப் பொருள் கூறும் நூல், பற்றின்மை

நிறுத்தம் - நிறுத்தும் இடம்

நிரை - பசு, ஒழுங்கு, வரிசை

நிறை - கற்பு, அளவு, அழிவின்மை, நீதி, வரையறை, திண்மை, நிரப்பு

நூரல் - அவிதல், பதங்கெடுதல்

நூறல் - அவித்தல்

நேரி - அமுக்கு, நசுக்கு, அழுத்து

நேறி - வழி, கோயில், கற்பு

பரட்டை - பரட்டைத்தலை

பறட்டை - செழிப்பற்றது

பரதி - கூத்தாடுபவன்

பறதி - அவசரம், பறத்தல்

பரத்தல் - அலமறுதல், மிகுதல்

பறத்தல் - பறந்துசெல்லல்

பரம்பு - வயலை சமப்படுத்தும் பலகை

பறம்பு - பாரியின் மலை

பரல் - விதை, பருக்கைக்கல்

பறல் - பறவை

பரவை - கடல், ஆடல், பரப்பு

பறவை - பறப்பவை, ஒரு நோய்

பரி- குதிரை, பெருமை, விரைவு, செலவு, சுமை, மிகுதி

பறி - பறித்தல், கொள்ளை, பொன், வலை, உடம்பு,ஓலைப்பாய்

பரித்தல் - காத்தல், ஓடுதல், தாங்குதல், சுமத்தல், சூழ்தல், தரித்தல்,

பறித்தல் - பிடுங்குதல்

பரிவு - அன்பு, துன்பம், இரக்கம்

பறிவு - கழிவு, அதிர்தல்

பருகு - குடி, அருந்து

பறுகு - பறட்டை, அன்பு, பக்குவம்

பரை - சிவசக்தி

பறை - இசைக்கருவி, இறகு, வாத்தியம், பறவை, சொல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT