நண்பர்களின் நல்லியல்புகள்
நட்பைப் போல செய்துகொள்வதற்கு உலகில் எதுவுமில்லை. அத்தகு சிறப்புப் பெற்றது நட்பு. நட்பைப் பற்றி பல புலவர்கள் பலவாறாக எடுத்துரைத்துள்ளனர்; இடித்துரைத்துள்ளனர். ஒருவனின் குணத்தையும் குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் கண்டு நட்புக் கொள்ளல் நலம் பயக்கும்; வளம் பயக்கும்.

செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு
கனவிலும் துன்பம் தருவதாகும்; துயரம் மிகுவதாகும்.
முகத்தால் இனிமையாக சிரித்துப் பேசி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்புக் கொள்வதற்கு அஞ்ச வேண்டும்; அத்தகு நட்பைக் கைவிட கெஞ்ச வேண்டும்.
1. நண்பர் இறந்தபோது பிரிவாற்றாமையால் தாமும் இறத்தல், 2. நண்பருக்கு வறுமை வந்தபோது பொருள் கொடுத்து உதவல், 3. நண்பருக்கு எஞ்ஞான்றும் இனியசொற்களையே கூறுதல், 4. நண்பருடன் எப்போதும் கூடியிருத்தல், 5. நண்பர் வருந்துங்கால் தாமும் வருந்துதல், 6. நண்பர் பிரிய நேரின் கவலைப்படுதல் எனும் ஆறு குணங்களும் ஒரு சிறந்த நண்பனுக்கு அமைந்திருந்தால் நண்பரின் வாழ்வு பிரகாசமாக விளங்கும்; துலங்கும்.
மேற்காண் அறுவகைக் குணங்களும் ஒரு நண்பனுக்கு இருக்க வேண்டுமென்று, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "ஏலாதி'யில் புலவர் கணிமேதாவியார் கூறியிருக்கிறார். பாடல் வருமாறு:
""சாதல், பொருள்கொடுத்தல், இன்சொல், புணர்வுஉவத்தல்,
நோதல், பிரிவில் கவறலே - ஓதலின்
அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணமாக
மென்புடையார் வைத்தார் விரித்து'' (பாடல்-38)