சொல் வேட்டை- 47
தொழில் நுட்பத்தில், அதிலும் குறிப்பாக மின்னணுவியலில், வளர்ச்சி என்பது அசுர வேகத்தில் நிகழ்கிறது. கணினிகளின் காலம் இன்னும் ஒரு நூற்றாண்டைக்கூடத் தொட்டுவிடாத நிலையில், அத்தொழில் நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியும் மாற்றங்களும் வியப்பைத் தருகிறது.
தொழில் நுட்பத்தில், அதிலும் குறிப்பாக மின்னணுவியலில், வளர்ச்சி என்பது அசுர வேகத்தில் நிகழ்கிறது. கணினிகளின் காலம் இன்னும் ஒரு நூற்றாண்டைக்கூடத் தொட்டுவிடாத நிலையில், அத்தொழில் நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியும் மாற்றங்களும் வியப்பைத் தருகிறது.
கணினிகள் உருவாக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பின், அவற்றில் சேகரிக்கப்படும் தகவல்களை அப்படியே பதிவு செய்து, ஒரு கணினியிலிருந்து இன்னொன்றுக்கு அவற்றை எடுத்துச் செல்ல ச்ப்ர்ல்ல்ஹ் க்ண்ள்ந் என்னும் தகவல் சேகரிப்பு மையம் 1970-களில் உருவாக்கப்பட்டு, சந்தைக்கு வந்தது. மெல்லிய ப்ளாஸ்டிக் உறைக்குள் தூசிகளைத் தானாகவே உதறி விடும் இழைகளோடு, இத்தகவல் சேகரிப்பு மையம் உருவாக்கப்பட்டது.
ஆனால், இவற்றைப் படிக்கும் திறனற்ற கணினிகள்
1990-க்குப் பின் உருவாக்கப் பட்டபோது, காம்பாக்ட் டிஸ்க் (ஸ்ரீர்ம்ல்ஹஸ்ரீற் க்ண்ள்ந்) எனப்படும் டிஜிட்டல் ஆப்டிகல் தகடுகள், தகவல் சேகரிப்பு மையங்களாக உபயோகத்திற்கு வந்தன. இத்தகடுகள் 1970-களிலேயே, கிராமஃபோன் தட்டுக்களுக்குப் பதிலாக, இசையைப் பதிவு செய்வதற்காக உருவாக்கம் பெற்றிருந்தாலும், இவற்றில் தகவல்களைச் சேகரிக்கும் தொழில் நுட்பம் 1990-க்குப் பின்தான் வந்தது. ஆனால், ஙட-3 எனப்படும் எண்ணுருக்கூறு ஒலி வடிவம் (க்ண்ஞ்ண்ற்ஹப் ர்ல்ற்ண்ஸ்ரீஹப் ச்ர்ழ்ம்ஹற்) பயனாக்கத்திற்கு வந்ததும், இஈ தகடுகளின் பயனாக்கம் வீழ்ச்சியுற்றது. அதனால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப, ஐ.பி.எம்., லெக்சர், ட்ரெக் மற்றும் சான் டிஸ்க் போன்ற கணினி நிறுவனங்கள் ஒன்று கூடிச் செய்த முயற்சியால், 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஃப்ளாஷ் ட்ரைவ் (ச்ப்ஹள்ட்)அல்லது ஜம்ப் ட்ரைவ் (த்ன்ம்ல் க்ழ்ண்ஸ்ங்) என்றெல்லாம் அறியப்படும் பென்-ட்ரைவ் உருவாக்கப்பட்டது. முதன்முதலில் 2000-ஆம் ஆண்டில், ட்ரெக் நிறுவனம் சிங்கப்பரிலும் ஐ.பி.எம். நிறுவனம் வட அமெரிக்காவிலும் இதை அறிமுகப்படுத்தியபோது,
ற்ட்ன்ம்க்ஷ க்ழ்ண்ஸ்ங் என்ற பெயரை ட்ரெக் நிறுவனம் வழங்கியது.
உண்மையில், பென்-ட்ரைவ் என்பது ஒரு கணினியில் உள்ள தகவல் கோப்புகளைப் பதிவு செய்து எடுத்துக்கொண்டு போய் இன்னொரு கணினியில் படிக்கவும், பதிவு செய்யவும் உதவும் ஒரு விரற்கடை அளவுள்ள கருவியாகும். ஆனால், தொழில் நுட்ப மொழியியலாளர்களைக் கேட்டால், பென்-ட்ரைவ் என்ற சொல் ஒரு காலக் குளறுபடி (ஹய்ஹஸ்ரீட்ழ்ர்ய்ண்ள்ம்) என்கிறார்கள். காரணம், ட்ரைவ் என்பவை இயந்திர நுட்பத்தில் அமைபவை. ஆனால், பென்-ட்ரைவ் மின்னணுவியல் நுட்பத்தில் அமைந்தது. இத்தகவல்களோடு, இவ்வாரக் கடிதங்களைப் பார்ப்போம்.
ப.கோபி பச்சமுத்து, நிரல்களைத் தொகுப்பாகப் பதிவு செய்ய உதவும் சாதனம் என்பதால், இச்சொல்லுக்கு நிரல்திரட்டி அல்லது நிரல் தொகுப்பி என்றும், கோ.தமிழரசன், பதிவுக்கோல் அல்லது பதிவு ஏற்பான் என்றும், செ.சத்தியசீலன், பேனா இயக்கி, தகவல் பெயர்த்தி, விவரச்செப்பு, தகவல் தேக்கி என்றும், ஹரணி, தகவல் பேனா, தகவல் சேமிப்பி, தரவுமாற்றி, இலகு கணினியம் ஆகிய சொற்களைப் பரிந்துரைத்துள்ளனர்.
அ.கு.மான்விழி, விவரப்பட்டியல், விவரக்கலன், பட்டியல்பட்டை, பட்டியல்செலுத்தி, பட்டியல் குப்பி, விவரக்குப்பி, பட்டியல் தகடு ஆகிய சொற்களுள் ஏதேனும் ஒன்றைக் கைக்கொள்ளலாம் என்று கூறுகிறார்.
கோ.மன்றவாணன், தரவகக்கோல், பதிவகக்கோல், சேமிப்பகக்கோல், களஞ்சியக்கோல், திரட்டகக்கோல், தரவுறை, தரவுச்சுரை, பதிவகத்தட்டை, செருகுத் தரவகம், செருகுத் திரட்டகம், செருகுப் பதிவகம், நிரல்திரட்டி என்றும், பெ.கார்த்திகேயன், பெருஞ்செய்தி சேமிப்பி, கணினி வன்பொருள் சேமிப்பி, தகவல் சேமிப்பி என்றும், என்.ஆர்.ஸத்யமூர்த்தி, வைப்பு ஏற்றி, வைப்பு மாற்றி என்றும் - இவ்வாறு பலரும் பல சொற்களைப் பரிந்துரைத்துள்ளனர்.
சில தமிழ் இணைய தளங்களில், இச்சொல்லுக்கு இணையாக நிரல் திரட்டி, கையடக்கத் தகவல் சேமிப்புக் கருவி, பேனா இயக்கி, பொதுத்தொடர் வட வட்டோட்டி ஆகிய சொற்கள் கையாளப்பட்டுள்ளன.
இவற்றை சீர்தூக்கிப் பார்க்கும்போது, இச்சொல்லுக்கு நாம் உருவாக்கும் இணைச்சொல் இக்கருவியின் பயன்பாட்டையும், இக்கருவிக்கு ஆங்கிலத்தில் வழங்கப்பட்டிருக்கும் பெயரையும் ஓரளவிற்கு இணைப்பதாக இருக்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக ஆய்விற்கு ஆதாரமாகத் திரட்டப்படும் அடிப்படைத் தகவல்கள் (க்ஹற்ஹ) தரவு என்றழைக்கப்பட்டு, பெருமளவில் பயனாக்கத்திற்கு வந்து விட்டதைக் காண்கிறோம். பென்-ட்ரைவ் என்ற கருவி ஒரு தகவல் சேகரிப்பு மையமாக, ஒரு எழுதுகோலைவிடச் சிறியதாக இருக்கும் காரணத்தால், அதற்கு "தரவகக்கோல்' என்ற சொல் பொருந்தும் எனத் தோன்றுகிறது.
எனவே, பென்-ட்ரைவ் என்ற சொல்லுக்கு இணைச்சொல் தரவகக்கோல்.