சேரா! உன்னாடு பொன்னாடு!
ஒளவையார் பாடிய தனிப்பாடலுள் ஒன்று
ஒளவையார் பாடிய தனிப்பாடலுள் ஒன்று,
சிரப்பால் மணிமவுலிச் சேரமான் தன்னைச்
சுரப்புஆடு யான்கேட்கப் பொன்ஆடு
Advertisement
Advertisement
ஒன்று ஈந்தான்
இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர்
தாம்அறிவார் தம்கொடையின் சீர்!
என்பது. "தான் தங்கிய இல்லத்தார் வறுமையில் இருப்பதை அறிந்த ஒளவையார், தனக்கு விருந்தளித்த அவ்வில்லத்தாருக்கு அவர் வறுமையைப் போக்க அந்நாட்டு மன்னனிடம் ஓர் ஆட்டைப் பெற்றுக்கொடுத்தால், அவர்கள் அதை வைத்து தங்கள் வறுமையைப் போக்கிக்கொள்வர்' என்று எண்ணினார். உடனே மன்னனிடம் சென்றார்.
÷""தலையிலே மணிமுடி சூடிக்கொண்டிருக்கும் சேர மன்னா! பால் தரும் ஆடு ஒன்று வேண்டும்'' என்று கேட்டார். இரந்தோர்க்கு பொன்னும் பொருளும் வாரி வழங்கும் அச்சேர மன்னன், கேட்பது தமிழ்ப் புலவர் என்பதை அறிந்தான். புலவருக்குச் சாதாரண ஆட்டைப் பரிசாகக் கொடுப்பதா? அவர் வறுமையைப் போக்க பொன்னாலான ஆட்டைப் பரிசாகக் கொடுப்பதே தமக்கும், தமிழுக்கும் பெருமை என்றெண்ணி, பொன்னால் செய்யப்பட்ட ஆடு ஒன்றை ஒளவைக்குப் பரிசளித்தான்.
÷இரந்தோர் கேட்பதை கேட்டாலும், கொடுப்பவர் தமக்குப் பெருமை தரும்படி கொடுப்பதே ஈகையின் சிறப்பு என்பர் சான்றோர். அப்படிச் செய்த மன்னனை, பரிசில் பெற்ற ஒளவையார், "சேரா உன்னாடு பொன்னாடு' என்று இருபொருள்படப் பாராட்டினார். இச்சொற்றொடர், ""சேர மன்னா! உன் ஆடு பொன் ஆடு'' என்று ஒரு பொருளும், ""சேர மன்னா! உன் நாடு பொன் நாடு'' என்று மற்றொரு பொருளும் கொடுப்பதான தொடர்.
இதிலிருந்து சேர மன்னனின் ஈகை உள்ளத்தையும், பொன் விளைவது போன்ற வளம் மிகுந்த பூமி சேர பூமி என்பதையும் அறியலாம்.