முகப்பு
தமிழ்மணி

கலித்தொகையில் விடுகதை

நம் தமிழர்களாய மூதாதையர்கள் தத்தம் அறிவையும் புலமையையும் சோதித்துக்கொள்ள விளையாட்டுகளை அதற்கேற்ப அமைத்துக் கொண்டனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:24 AM
பகிர்:

நம் தமிழர்களாய மூதாதையர்கள் தத்தம் அறிவையும் புலமையையும் சோதித்துக்கொள்ள விளையாட்டுகளை அதற்கேற்ப அமைத்துக் கொண்டனர். அவ்வகையில் ஒன்றான விடுகதையைக் கூறலாம். இன்றைக்கு நாம் கையாளும் விடுகதையைத் தொல்காப்பியர் காலத்து மக்கள் "பிசி' என்றனர். இதனைத் தொல்காப்பியர் (தொல்) செய்யுளியலில் (நூ.75) குறித்துள்ளார். எடுத்துக்காட்டாக ஓர் விடுகதையினைக் கூறலாம்.

""கையுண்டு காலில்லை; கழுத்துண்டு தலையில்லை; உடலுண்டு உயிரில்லை - அது என்ன?'' என்பது விடுகதைக்கான வினா. இதற்கு விடை தெரிந்தோர் "சட்டை' (மேலாடை) என்று கூறிவிடுவர். இதே போல், கலித்தொகையில்,

""ஐ தேய்ந்தன்று பிறையுமன்று

Advertisement

மை தீர்ந்தன்று மதியுமன்று

வேயம் அன்றன்று சுனையுமன்று

மெல்ல வியலும் மயிலுமன்று

சொல்லித் தளரும் கிளியுமன்று'' (கலி.55)

என்று விடுகதைப் பாடல் ஒன்று வருகிறது. இதற்கு விடை "பெண்' எனக் கொள்ளப்படும். அதாவது, வியக்கும்படியாகத் தேய்ந்துள்ள பிறை இல்லை என்பதால் (நெற்றி) நுதல் என்றும்; மாசுமரு இல்லாது களங்கம் நீங்கியுள்ளது, ஆனால் திங்கள் இல்லை முகம் என்றும்; மூங்கிலன்று என்பதால், மூங்கிலையொத்த தோள்கள் என்றும்; பூக்கள் மலர்ந்துள்ள ஆனால் பூங்களில்லை என்பதால் கண்கள் என்றும்; அக்கண்களே சுனை இல்லை என்றும்; மெதுவாக நடக்கின்றதால் மயில் இல்லை ஆனால், மயில் போலும் சாயல் என்றும்; பேசுவதால் கிளி இல்லை என்பதால் அவளே "பெண்' என்றும் விடை கூறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments