மண்ணாயினும் கொண்டு வீசுமினே!
பன்னிரு ஆழ்வார்களுள் நம்மாழ்வாரை, வைணவ மறைக்கு "முதல் தாய்' என்பர். நம்மாழ்வார் தம்மைத் தலைவியாகப் பாவித்து, ("நாயக-நாயகி' பாவத்தில்) பெருமாள் மீது காதல் கொண்டு பாடியவர். வெண்ணிலவு, குளிர் தென்றல், மயக்கும் மாலைப்பொழுது, இனிக்கும் இரவு ஆகியவை தலைவிக்குக் காதல் நோயைப் பெருக்கும் தன்மையுடையவையாகும்.

நம்மாழ்வாராம் தலைவியின் துயரத்தைத் தோழியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவள் பெருமாளை நோக்கி, ஆழிச் சக்கரத்தால் அகன்ற வானையும், பரந்த மண்ணையும் ஆளும் நீவிர், பசலை நோய் படர்ந்துள்ள இவளை வெறும் பெண்ணென்று இகழ்ந்து ஒதுக்குவது ஏனோ? (திருவிருத்தம்-53) எனக் கேட்கிறாள்.
பெருமாள் மீது கொண்ட காதல் நோயிலிருந்து தலைவியைக் காக்க ஒரேவொரு மருந்துதான் உண்டு. பெருமாள் அணிந்திருக்கும் குளிர்ச்சி தரு தண்துழாய் என்னும் துளசிதான் அந்த மருந்து. அத்துளசியை யாராவது கொண்டுவந்து இவளின் துன்பத்தை நீக்கி உதவுங்கள் என்பதை, "துளசி மாலை கிடைக்கவில்லை என்றால் ஓர் இலை மட்டுமாவது தாருங்கள்; அதுவும் கிடைக்கவில்லை என்றால் இலையுதிர்ந்த துளசிச் செடியின் தண்டாகிலும் கொடுங்கள்; அதுவும் இல்லையெனக் கூறுவீர்களேயானால் அச்செடியின் வேர் கிடைத்தாலும் எடுத்து வாருங்கள்; இறுதியாக வேர்கூட இல்லையெனில், அந்தத் துளசிச்செடி முளைத்து நின்ற மண்ணையாவது கொண்டு வாருங்கள்'' என்ற தோழியின் கூற்று "துளசியின்' மாண்பைக் கூறுகிறது.
""வாராயின முலையாள் இவள் வானோர் தலைமகனான்
சீராயின தெய்வ நன்னோய்இது தெய்வத் தண்ணந் துழாய்த்
தாராயினும் தழையாயினும் தண்கொம்ப தாயினும்கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே!
-கோ. தமிழரசன்