முகப்பு
தமிழ்மணி

"சொல் தேடல்'பகுதியில் இடம்பெற்ற சொற்கள்

"சொல் தேடல்'பகுதியில் இடம்பெற்ற சொற்கள்

Updated On : 13 மார்ச், 2016 at 1:02 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:15 PM

1. Stepney - சேம உருளை / வைப்பு வட்டை

2. Dystopia - பிணிமிகு நாடு / முரணுலகு

3. Jumper - துளைப்புளி

Advertisement

4. Plumber - குழாய்க் கொற்றர்

5. Travelator - நகர்பாதை

6. Blackmail - - அந்தரங்க அச்சுறுத்தல் / கமுக்க மருட்டல்

7. Juggernaut- உலகப்பன் பெருந்தேர்

8. Eustress - நல்லழுத்தம்

9.Wicket Gate - - பிள்ளை வாயில் / திட்டி வாயில்

10.Vacuum Cleaner - - தூசுறிஞ்சி / மின் துடைப்பம்

11.Drone குறியறி விண்கலம்.

12. Affluenza - - பணக்காய்ச்சல்

13. Pressure-Cooker -- அவிகலன் / அவியி

14.Omni Bus- நிறைபேருந்து / சீருந்து

15. Moniker - சிறப்புப் பெயர்

16. Trail Blazer- புகழ்ச்சுடர்

17. Aerobics- வளியாட்டம் / வளிப்பயிற்சி

18. Jet-lag - விண்பயணக் களைப்பு / விமானப் பயணக் களைப்பு

19. Seal -- ஏமப்பொறி / மூடுகுறி

20.Doppelganger- உருவப்போலி / அச்சு உரு

21.Ego- தான்மை /தன் முனைப்பு

22. Voyeurism- நக்க நாட்டம் /

காமப் படிற்றொழுக்கம்

23.Remote - கைப்பொறி / சேணி

24. Buzzer- முரலி / முரலொலி

25Icon- சுட்டுரு / திருவுரு

26. Anchor- ஊடக நிரலர் / நிரல் நிலையர்

27. Claustrophobia - இட்டிட வெருட்சி / அடைப்பிட அச்சம்

28. Capitation - தலைக் கட்டணம்/நுழைவுக் கட்டணம்

29. Bull Dozer - நிரவி /சமனி

30.Repartee - தாக்குரை/ எதிரடி

31. Reflector - மின்னி/ ஒளிரி

32. Incubator - கதகதப்புப் பேழை /

கருவறைப் பெட்டகம்

33. Litotes - தாழாத் தாழ்ச்சி / ஈரெதிர் நவிற்சி

34.  Palindrome- மாலைமாற்று / இருதலை மடக்கு

35.Villain - கொடியவன் / அலைவன்

36.Presstitute - ஊடகப் பரத்தர்/ ஓரம்போகு ஊடகர்

37.Pace maker- மின்துடி/ மின் நாடி

38. Socialite - ஆரவாரவாணர் /

நாகரிக விரும்பி

39.Tunnel - புழை/ குடைவழி

40. Petrichor - வெங்கார் மணம் / மழைமணம்

41. Table - பணிப்பலகை / மேட்டி

42. Authority- விற்பன்னர் / வல்லுநர்

43.Buffet - விருப்புணா / எடுத்தூண்

44. Ball point pen - முகிழ்முனைக் கோல்/ குமிழ் முனைக் கோல்

45. Paparazzi - நிழற்பட வேட்டையர் / நிழற்பட போக்கிரி(லி)கள்

46.  Firenado- சூறைத்தீ / தீச்சுழலி

47.  Seenager - - பின்பதிம அகவையர் /முதிர் விடலையர்

48. Tread mill - நடைப்பொறி / மிதிபொறி

49. Charisma- தனி ஈர்ப்பு / தனித் திரு

50.  Pen friend - - திருமுகத் தோழர் / காணா நண்பர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.