தமிழ்மணி

அடியேன் எனில் தடி எதற்கு?

DIN

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல்துறைப் பேரறிஞராக விளங்கியவர் பூண்டி அரங்கநாத முதலியார். ஆங்கிலமும், அருந்தமிழும் ஐயமறக் கற்றுத் துறைபோகிய கல்வியாளர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணிபுரிந்த பேராளர். இன்சுவை மிக்க "கச்சிக்கலம்பகம்' இயற்றி புகழ் கொண்டவர். அவர் வாழ்ந்த காலத்தில் பல்லோராலும் மதித்துப் போற்றும் மாண்பினராக வாழ்ந்தவர்.
தமிழ்த் தாத்தா உ.வே.சா.வால் பெரிதும் மதித்துப் போற்றப்பெற்றவர். தமிழ்த் தாத்தாவின் நூல்கள் பதிப்பித்து வெளிவருங்காலம் அவருக்குப் பலவகைகளிலும் உதவியதாக "என் சரித்திரம்' நூலில் உ.வே.சா.வே குறிப்பிட்டுள்ளார். நகைச்சுவை ததும்பும் வண்ணமும், இனிமையாகவும் உரையாடுவதில் வல்லவர்.
ஒருமுறை பூண்டி அரங்கநாத முதலியாரைக் கண்டபோது, நீதிபதி முத்துசாமி ஐயர் தன்னிடமிருந்த வளைத் தடியைக் கையில் தொங்கவிட்டவாறே கரங்களைக் கூப்பி "அடியேன் வணக்கம்' என்று அரங்கநாதருக்கு மரியாதை
செய்தார்.
பதிலுக்கு அரங்கநாத முதலியாரும் தமது கைகளைக் கூப்பி, "வணக்கம்' சொன்னதோடு, "அடியேன் எனில் தங்களது கரங்களில் தடி எதற்கு?'
என்றார். இந்தப் பதிலைக் கேட்ட எல்லோரும் சிரித்து மகிழ்ந்தனராம். நீதிபதி முத்துசாமி ஐயர் தனது சிரிப்பை அடக்குவதற்கு மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டாராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT