தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி

புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புனல் ஊர பொதுமக்கட்கு ஆகாதே
பாம்பறியும் பாம்பின கால். (பாடல்-5)

நன்மை மிகுந்த அழகிய நீர்வளம் நிரம்பிய ஊரனே! பாம்பினுடைய கால்களைத் தமக்கு இனமாகிய பாம்புகளே அறியுந் தன்மையுடையன. அதுபோல், அறிவிற் சிறந்தவர்களை அறிவினால் தெரிந்துகொள்ளும் திறம், (அவர்கள் போன்ற) அறிவிற் சிறந்தவர்களுக்கே விளங்கும், கல்வியறிவில்லாதவர்களுக்கு விளங்காது. (க-து.) கற்றோர் பெருமையைக் கற்றோர் அறிவார்.
"பாம்பின் கால்களைப் பாம்புகளே அறியும்' இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT