தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி

வீங்குதோட் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால் - ஆங்கு
முடியும் திறத்தால் முயல்கதாம் கூரம்
படியிழுப்பின் இல்லை யரண். (பாடல்-49)


பருத்த தோளை உடைய சோழனது சினம், மிக்க ஆகாயத்தின்கண்ணே அசைந்து கொண்டிருந்த அசுரர்களது ஊரினைத் தேவர்கள் பொருட்டுத் தொலைவித்தலால், எவ்வளவு முடியுமோ முடியும் வழியால் முயற்சி செய்க. கூரிய அம்பு அடியானது பொருந்த மிக விரைவாகத் தொடுப்பின் அதனைத் தடுத்தற்குரிய கவசம்  இல்லையாதலால். (க-து.) நம்மால் முடிந்த அளவும் முயற்சி செய்தால் முடியாத காரியம் ஒன்றில்லையாம்."கூர் அம்பு அடியிழுப்பின் இல்லை அரண்' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT