மகாகவியின் மகாகவிதை!
மகாகவி பாரதி மறைந்த பிறகு காந்தியடிகள் நடத்திய "யங் இந்தியா' பத்திரிகையில், பாரதியின் 18 கவிதைகளை ஆங்கிலத்தில் மூதறிஞர் ராஜாஜி மொழிபெயர்த்து வெளியிட்டார்.
மகாகவி பாரதி மறைந்த பிறகு காந்தியடிகள் நடத்திய "யங் இந்தியா' பத்திரிகையில், பாரதியின் 18 கவிதைகளை ஆங்கிலத்தில் மூதறிஞர் ராஜாஜி மொழிபெயர்த்து வெளியிட்டார். அவற்றுள் பெரும்பாலானவை தேசபக்திப் பாடல்கள். அந்தப் பாடல்களை கவனமாகப் படித்த மகாத்மா காந்தி 17.3.1929-இல் தமது "நவஜீவன்' இதழில் ஓர் அதி அற்புதமான பாராட்டை (பாரதிக்கு) வழங்கினார். "மகாகவியின் மகாகவிதை' எனும் தலைப்பில் உள்ள பலரும் அறியாத அப் பாராட்டுரை பின்வருமாறு:
"எனக்கு சுப்பிரமணிய பாரதி போன்றோரின் எழுத்துக்களே உண்மையான ஒளிவீசும் கவிதையாகத் திகழ்கிறது. மக்களைத் தட்டி எழுப்பி, விழிப்பூட்டி அவர்களின் வாழ்க்கைக்குப் புதிய ஒளி ஊட்டும் சக்தி அத்தகு எழுத்துக்களுக்கே உள்ளது'' (நவஜீவன்-17.3.1929).
-எதிரொலி விசுவநாதன்