அரசாணையை நிறைவேற்றல்
வெற்றிச் சிறப்புடைய வேலை உடைய அரசன் ஓர் ஆணையைப் பிறப்பித்தால், யாம் ஒன்றும் அதனால் பெற்றிலேம் என்று சொல்வது அறியாமையே ஆகும்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:40 PM
பழமொழி நானூறு
வெற்றிவேல் வேந்தன் வியங்கொண்டால் யாமொன்றும்
பெற்றிலே மென்பது பேதைமையே - மற்றதனை
எவ்வ மிலராகிச் செய்க அதுவன்றோ
செய்கென்றான் உண்கென்று மாறு. (பா.181)
வெற்றிச் சிறப்புடைய வேலை உடைய அரசன் ஓர் ஆணையைப் பிறப்பித்தால், யாம் ஒன்றும் அதனால் பெற்றிலேம் என்று சொல்வது அறியாமையே ஆகும். அவன் ஏவலை எவ்விதக் குறைபாடும் இல்லாமல் உடனே செய்து முடிக்க வேண்டும். அதுவல்லவோ, "செய்க' என்றவன், பின் "உண்க' என்று உபசரிக்கச் செய்யும் வழியாகும். செயலுக்கு ஏவியவன், அது முடிந்ததும், பாராட்டிப் பரிசு தராமல் போவதில்லை என்பது கருத்து. "செய்கென்றான் உண்கென்று மாறு' என்பது பழமொழி.