விஜய் சென்ற தனி விமானத்தில் பறக்கும் படையினர் சோதனை!
திருச்சி விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தனி விமானத்தில் பறக்கும் படையினர் சோதனை செய்ததைப் பற்றி...
திருச்சி விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தனி விமானத்தில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் தமிழகம் முழுதுவம் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
அதனொரு பகுதியாக, சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி தொகுதியில் விஜய்யின் பிரசாரத்துக்கு இன்று திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த விஜய், அங்கிருந்து தனது பிரசார வாகனத்தில் காரைக்குடி சென்றார்.
Advertisement
Advertisement
வழிநொடுகிலும் விஜய்யை வரவேற்று தொண்டர்களும், விஜய்யின் ரசிகர்களும் குவிந்ததால், மதுரையில் இருந்து காரைக்குடிக்கு அவரின் வாகனம் மிகவும் மெதுவாகச் சென்றது.
காரைக்குடிக்குச் சென்றபோது தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்த மதியம் 2.30 மணியைவிட கூடுதல் நேரமானதால், காரைக்குடி வேட்பாளர் டி.கே. பிரபுவை மட்டும் அறிமுகம் செய்துவிட்டு, எதுவும் பேசாத விஜய், அங்கிருந்து கிளம்பினார்.
இதனால், நீண்ட வெய்யிலில் காந்திருந்த மக்கள் பலரும் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து மதுரையில் இருந்து தனி விமானம் மூலமாக அவர் திருச்சி விமான நிலையத்துக்குச் சென்றடைந்தார்.
திருச்சி வந்த விஜய்யிடம் மற்றும் தனி விமானத்தில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தேர்தல் விதிகளுக்கு மாறாக, கணக்கில் வராத பணம், பரிசுப் பொருள்கள் எதாவது இருக்கிறதா? என்றும் அவர்கள் சோதனையிட்டனர். அந்தச் சோதனையில் பணம், பரிசுப்பொருள்கள் எதுவும் கண்டறியப்பட்டவில்லை.
முன்னதாக, மதுரையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் எஸ்.எஸ். கோட்டை அருகே அவரது வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.
Flying Squad officials conducted a search of Tamilaga Vettri Kazhagam leader Vijay's private aircraft at the Trichy Airport.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.