பழமொழி நானூறு
சேற்றுள் வழுவி அகப்பட்டு வருந்தாது காத்து இழுக்கவல்ல எருது அங்கே எழுந்து செல்லாதிருக்கவும்,
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:19 PM
வினைமாட்சி இல்லார் சிறப்புறார்
ஆற்ற வினைசெய்தார் நிற்பப் பலவுரைத்து
ஆற்றாதார் வேந்தனை நோவது - சேற்றுள்
வழாமைக் காத்தோம்பி வாங்கும் எருதாங்
கெழாமைச் சாக்கா டெழல். (பாடல்-155)
மிகவும் போர்த்தொழிலைச் செய்து வெற்றியை உண்டாக்கினார் வாளாயிருப்ப, போரிற் சென்று ஒரு வினையும் செய்யாதார் தமக்குச் சிறப்புச் செய்திலனென்று பலவாறுரைத்து அரசனை நொந்து கொள்வது, சேற்றுள் வழுவி அகப்பட்டு வருந்தாது காத்து இழுக்கவல்ல எருது அங்கே எழுந்து செல்லாதிருக்கவும், அவ்வாற்றலில்லாத சகடம் எழுந்து செல்லுதலை யொக்கும். "சேற்றுள் - வழாமைக் காத்தோம்பி வாங்கும் எருதாங் கெழாமைச் சாக்கா டெழல்' என்பது பழமொழி.