பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:53 PM
மூா்க்கா் திருந்தாா்
ஓா்த்த கருத்தும் உணா்வும் உணராத
மூா்க்கா்க்கு யாதும் மொழியற்க - மூா்க்கன்றான்
Advertisement
கொண்டதே கொண்டு விடானாகும் ஆகாதே
உண்டது நீலம் பிறிது. (பாடல்- 168)
ஆராய்ந்துவைத்த கருத்தும், உண்மையை அறியும் அறிவும் அறியாத மூா்க்கா்களுக்கு ஒரு பொருளையும் சொல்லாதொழிக. நீல நிறத்தை உண்டபொருள் வேறொரு நிறத்தைக் காட்டுதல் முடியாது. (அதுபோல), மூா்க்கன் தான் மேற்கொண்டதனையே மனத்தின்கண் கொண்டு விடான். (க-து.) மூா்க்கா்கள் பிறா் கூறுவனவற்றைக் கேட்டுத்திருந்தாா். ‘ஆகாதே உண்டுது நீலம் பிறிது’ என்பது பழமொழி.