பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
நல்ல நெறிகளை மனத்திற் கொண்டு, நல்ல அறநெறிகளை மேற்கொள்ளாதவரையும், சான்றோர்கள் அவர்களுடைய வன்மையைச் சிதைத்து அடங்கச் செய்து, நல்லற நெறியை அறிவுறுத்துதல் முறை. மனம்
உலப்பில் உலகத்து உறுதியை நோக்கிக்
குலைத்தடக்கி நல்லறம் கொள்ளார்க் கொளுத்தல்
மலைத்தழுது உண்ணாக் குழவியைத் தாயர்
அலைத்துப்பால் பெய்து விடல். (பாடல்-212)
நல்ல நெறிகளை மனத்திற் கொண்டு, நல்ல அறநெறிகளை மேற்கொள்ளாதவரையும், சான்றோர்கள் அவர்களுடைய வன்மையைச் சிதைத்து அடங்கச் செய்து, நல்லற நெறியை அறிவுறுத்துதல் முறை. மனம் மாறுபட்டு அழுது பாலுண்ண மறுக்கும் குழந்தையைத் தாய்மார்கள் வருத்திப் பாலூட்டுவது போன்ற சிறந்த செயலாகும் அது. "அலைத்துப்பால் பெய்து விடல்' என்பது பழமொழி.(திருத்தம்: 212-இல் (பாடல் எண்) இடம்பெற வேண்டிய பாடல் வரிசையில் பாடல்-216 வெளியானதால், இப்போது 212-ஆவது பாடல் இடம்பெறுகிறது.)