முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மூங்கில்கள் அடர்ந்திருக்கும் மலைகளுக்கு உரியவனே! தம்மவரே ஆனாலும், ஒருவர் தம்மைப் புகழ்ந்து பேசுகின்ற சமயத்திலே, அந்த முகஸ்துதிக்கு மனம் மகிழலாகாது. அப்படிப் பேசுவதை உடனே தடுத்துவிட வேண்டும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில் 
அமராது அதனை அகற்றலே வேண்டும். 
அமையாரும் வெற்ப! அணியாரே தம்மைத் 
தமவேனும் கொள்ளாக் கலம்.  (பாடல்232)

மூங்கில்கள் அடர்ந்திருக்கும் மலைகளுக்கு உரியவனே! தம்மவரே ஆனாலும், ஒருவர் தம்மைப் புகழ்ந்து பேசுகின்ற சமயத்திலே, அந்த முகஸ்துதிக்கு மனம் மகிழலாகாது. அப்படிப் பேசுவதை உடனே தடுத்துவிட வேண்டும். தம்முடையனவே என்றாலும், பொருத்தமில்லாத ஆபரணங்களை எவரும் அணிவதில்லை அல்லவா?  "அணியாரே, தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments