முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தன்மேலே பாய்கின்ற புலியின் எதிராக மானுக்கு ஒரு புகலிடமும் இல்லை. அதுபோலவே, பெருங்காற்றின் எதிராக வைக்கோல் சுமையும் நிலைத்து நிற்றல் இல்லை.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

தீயன வல்ல செயினும், திறல்வேந்தன் 
காய்வன சிந்தியார் கற்றறிந்தார்-பாயும் 
புலிமுன்னர் புல்வாய்க்குப் போக்கில்; அதுவே 
வளிமுன்னர் வைப்பாராம் இல். (பாடல்-234)

தன்மேலே பாய்கின்ற புலியின் எதிராக மானுக்கு ஒரு புகலிடமும் இல்லை. அதுபோலவே, பெருங்காற்றின் எதிராக வைக்கோல் சுமையும் நிலைத்து நிற்றல் இல்லை. ஆகவே, ஆற்றலுடைய வேந்தன் தீமையான கொடிய செயல்களையே செய்த காலத்திலும் கற்றறிந்தவர்கள் அதற்காக அந்த அரசனை எதிர்த்து, அவன் சினம் கொள்வனவற்றைச் செய்வதைப் பற்றி ஒருபோதும் நினைக்கவே மாட்டார்கள்.  "புலிமுன்னர் புல்வாய்க்குப் போக்கில்'; "அதுவே வளிமுன்னர் வைப்பாராம் இல்' என்பன இரு பழமொழிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments