முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மானைப் போன்று மருளும் கண்களை உடையவளே! வீரங்கெழுமிய பெருவேந்தர்கள் யானையைக் கொண்டே யானைகளைக் கட்டிப் பிடித்துக் கொள்வார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:20 AM
பகிர்:

ஆணம் உடைய அறிவினார் தந்நலம்
மானும் அறிவி னவரைத் தலைப்படுத்தல்
மானமர் கண்ணாய்! மறங்கெழு மாமன்னர்
யானையால் யானையாத் தற்று.  (பாடல்-223)

மானைப் போன்று மருளும் கண்களை உடையவளே! வீரங்கெழுமிய பெருவேந்தர்கள் யானையைக் கொண்டே யானைகளைக் கட்டிப் பிடித்துக் கொள்வார்கள். அதுபோலவே தம் உள்ளத்திலே நன்மை உடையவர்களான அறிவுடையோர், தமது நலத்தை ஒத்த அறிவாளிகளையே தம்முடன் சேர்த்துக் கொள்வதுமாகும். அறிவால் அறிவாளரை வசப்படுத்த முடியுமேயன்றி அறிவற்றோரால் அறிவாளரை வசப்படுத்த முடியாது என்பது கருத்து. "யானையால் யானையாத் தற்று' என்பது பழமொழி.

முழு கட்டுரையைப் படிக்க →