முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அடுத்தோன் றிரந்தார்க்கொன் றீந்தாரைக் கொண்டார்படுத்தேழை யாநென்று போகினும் போக!

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

அடுத்தோன் றிரந்தார்க்கொன் றீந்தாரைக் கொண்டார்
படுத்தேழை யாநென்று போகினும் போக!
அடுத்தேறல் ஐம்பாலாய் யாவர்க்கே யாயினும்
கொடுத்தேழை யாயினார் இல். (பாடல்-218)


நெருங்கி வளர்ந்திருக்கின்ற, இருள்போன்ற, கரிய, ஐவகையாக முடிக்கும் கூந்தலை உடையவளே! தம்மை வந்து அடைந்து ஒன்றை யாசித்து நின்றவர்களுக்கு அந்த ஒரு பொருளைக் கொடுத்தவர்களை; அப்படிக் கொண்டவர்களே பிற்காலத்து "இவர் ஏழையாவர்' என்று சொல்லிப்போனாலும் போகட்டும்; எத்தகையவர்களுக்கே ஆனாலும் கொடுத்து அதனால் ஏழையானவர் எவரும் இல்லை. "கொடுத்தேழை யாயினார் இல்' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments