பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
வலிமையானது நிலையாகும் தங்கியிருத்தலையுடைய மலைபோன்ற மார்பினை உடையவனே!
தந்தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன
வெந்தொழிலர் அய வெகுளிகட்குக் கூடுமோ?
மைந்திறை கொண்ட மலைமார்ப! ஆகுமோ,
நந்துழுத எல்லாம் கணக்கு? (பாடல்-245)
வலிமையானது நிலையாகும் தங்கியிருத்தலையுடைய மலைபோன்ற மார்பினை உடையவனே! நத்தையானது உழுது வரைந்தவெல்லாம் பொருள் கொண்ட ஒரு கணக்கு ஆகுமோ! அதுபோலவே, தம்முடைய தொழில்களைச் செய்து முடிக்கின்ற திறமையுடையவர்கள் செய்யும் செயல்களைச் செய்வது, கொடுந்தொழிலாளர்களாகிய வெகுளிகட்கு எப்போதாவது கைகூடி வருமோ? வரவே வராது.
"ஆகுமோ, நந்துழுத தெல்லாம் கணக்கு?' என்பது பழமொழி.