சொல் எதிர்ந்து, தம்மை வழிபட்டு ஒழுகலராய்,
கல் எறிந்தாற் போலக் கலாம் தலைக்கொள்வாரை,
இல் இருந்து, ஆற்ற முனிவித்தல் - உள் இருந்து,
அச்சாணி தாம் சுழிக்குமாறு. (பாடல்: 276)
நாம் கூறும் அறிவுரைகளைக் கேட்காதவராய் எதிர்த்து பேசிப் பணிந்து வாழ மறுத்து, கற்களை எறிவது போலப் பகைகாட்டி வாழ்பவர் தம் வீட்டில் இருந்து கொண்டு, அவரைத் திருத்த முயல்வதும், அதனால் அவர் வெறுப்பிற்கு ஆளாவதும் வண்டியில் பயணம் செய்து கொண்டே அவ்வண்டிக்குரிய அச்சாணியைக் கழற்றி எறிவதற்குச் சமமான செயலாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.