தமிழ்மணி

அழகு கெட அழாதே

தலைவியொருத்தி  யாரும் அறியாத வகையில் தலைவனொருவனை விரும்பிப் பழகி வந்தாள்.

முனைவா் கி. இராம்கணேஷ்

தலைவியொருத்தி  யாரும் அறியாத வகையில் தலைவனொருவனை விரும்பிப் பழகி வந்தாள். இதனைத் தோழி அறிந்துவிட்டாள். தலைவனுடன் தான் களவு வாழ்க்கை வாழ்வதை தலைவி தெரிவிக்கட்டும் என நினைத்த தோழி, அவள் சொல்வாள் என எதிர்பார்க்கிறாள். தலைவி மறைத்துப் பேசுகிறாள். 
அவ்வாழ்க்கையைத் தான் அறிந்து கொண்டதை தோழி, தலைவிக்கு உணர்த்திப் பேசுவதாகப் புலவர் கபிலரின் நற்றினைப் பாடல் நயமுடன் அமைந்துள்ளது.
எழாஅ யாகலின் எழில்நலந் 
                                                   தொலைய
அழாஅ தீமோ நொதுமலர் 
                                                      தலையே
ஏனல் காவலர் மாவீழ்த்துப் 
                                                             பறித்த
பகழி யன்ன சேயரி மழைக்கண்
நல்ல பெருந்தோ ளோயே 
                                                   கொல்லன்
எறிபொற் பிதிர்வின் சிறுபல் காய
வேங்கை வீயுகும் ஓங்குமலைக் 
                                                              காட்சி
மயிலறி பறியா மன்னோ
பயில்குரல் கவரும் பைம்புறக்  
                                     கிளியே  (நற். 13)
தினைக் கதிர்களைக் காக்க நாம் வந்துள்ளோம். கிளிகள் தினைகளைத் தின்கின்றன. இதனை நீ அறிந்து எழுந்து சென்று கிளிகளை விரட்டாமல் இருக்கின்றாய். இப்போது உன் அழகு கெட அழுகிறாய். அழுவதை நிறுத்து. 
இஃது அயலார் இருக்குமிடம்.  தினைப்புனம் காப்போர், புனத்தைத் தின்றழிக்க வந்த பன்றி முதலிய விலங்குகளை அம்பு எய்திக் கொன்று, அவற்றினின்றும் பறித்தெடுத்த அம்புபோலச் சிவந்த கண்களையும் தோள்களையும் உடையவளே. கொல்லன் பழுக்கக் காய்ச்சிய இரும்பினின்றும் சிதறும் தீப்பொறிகளைப் போல, வேங்கையின் பூக்கள் உதிரும் உயர்ந்த மலையினிடத்தில் இருக்கும் மயில்கள், கிளிகள் தினைக்கதிர்களை உண்டு செல்வதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன. 
கிளிகளின் செயலை மயில்கள் அறிந்திருப்பது போல, தலைவியாகிய உன்னுடைய களவு வாழ்க்கையைப் பற்றி நான் அறிந்துள்ளேன் என்பதைத் தோழி உணர்த்துகின்றாள். விலங்குகளின் மீதிருந்து பறித்தெடுக்கப்பட்ட அம்பானது, தலைவன் மீது பாய்ந்து எழுந்த தலைவியின் சிவந்த கண்களுக்கு உள்ளுறையாகச் சொல்லப்பட்டுள்ளது. தோழி உணர்ந்து கொண்டதை அறிந்து தலைவி அழுகிறாள். பலரும் இக்களவை அறிந்து அலர் தூற்றுவர் என்பதைத் தோழியுணர்ந்து அழாதே எனச் சொல்லி எச்சரிக்கிறாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT