பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
காட்டுப் பசு வாழும் மலைக்குத் தலைவனே! கேட்பாயாக. தம்மைத் தாமே காக்கத் தவறியவர் குதிரை பூட்டிய தேருக்கு உரிய அரசன் மேல் சினப்பது எப்படிச் சரியாக இருக்க முடியும்?
தாமேயும் தம்மைப் புறந்தர ஆற்றாதார்,
வாம் மான் தேர் மன்னரைக் காய்வது எவன்கொலோ?
ஆமா உகளும் அணி வரை வெற்ப கேள்
ஏமாரார் கொங்கு ஏறினார். (பாடல்: 341)
காட்டுப் பசு வாழும் மலைக்குத் தலைவனே! கேட்பாயாக. தம்மைத் தாமே காக்கத் தவறியவர் குதிரை பூட்டிய தேருக்கு உரிய அரசன் மேல் சினப்பது எப்படிச் சரியாக இருக்க முடியும்? கோங்க மரத்தில் தனியாக ஏறியவர் தமக்குரிய பாதுகாப்பை இழந்தவரே ஆவார்.