தமிழ்மணி

நாலடியார்: நாள்தோறும் கழியும் ஆயுள்!

நாள்தோறும் நாட்கழிவானது தவறாது வந்துகொண்டிருக்கக் கண்டும், அதன் உண்மையான இயல்பினை உணர மாட்டார்கள்.

தினமணி செய்திச் சேவை

வைகலும் வைகல் வரக்கண்டும், அஃதுணரார்,

வைகலும், வைகலை வைகுமென்று இன்புறுவர்;

வைகலும் வைகற்றம் வாழ்நாள் மேல் வைகுதல்

வைகலை வைத்துணரா தார்.

(பாடல் 39 அதிகாரம்: அறன்வலியுறுத்தல்)

நாள்தோறும் கடந்து போகும் நாட்கழிவைத் தம் வாழ்நாளின்மேல் செல்லுதலாக வைத்து, அந்த நாட்கழிவினைப் பற்றிய உண்மையை அறியாதவர்கள், நாள்தோறும் நாட்கழிவானது தவறாது வந்துகொண்டிருக்கக் கண்டும், அதன் உண்மையான இயல்பினை உணர மாட்டார்கள்.

நாள்தோறும் ஆயுள் கழிந்து போதலை இருக்கிறதென்று தம் அறியாமையால் நினைந்து, அவர்கள் எல்லாரும் அற்ப மகிழ்ச்சியினையே அடைவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன கண மன.. அல்ல ஜன கண மங்கள..! தேசிய கீதத்தை இப்படியும் பாடலாமா? காங்கிரஸ் விழாவில் குழப்பம்!

உன்னாவ் வழக்கு: குழந்தைகள் உயிருக்கு ஆபத்து! சாட்சிகளுக்கு பாதுகாப்பு கோரும் பாதிக்கப்பட்ட பெண்!

ஜன நாயகன் முன்பதிவு ஆரம்பம்!

கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பொதுக்குழு தனக்கு வழங்கும்: ராமதாஸ்

இந்திய அணியின் பயிற்சியாளரை மாற்றுவதாக பரவும் செய்தி உண்மையில்லை: பிசிசிஐ செயலர்

SCROLL FOR NEXT