தமிழ்மணி

கட்டவிழ்ந்த பிணிப்பு..

'நட்பு' என்று ஒருவரை யொருர் பிணித்திருந்த பிணிப்புக்களும் அற்றுப் போயின. மனைவிமாரும் தம் அன்பின் அளவிலே குறைந்தவராய் விட்டார்கள்.

DIN

நட்புநார் அற்றன; நல்லாரும் அஃகினார்:

அற்புத் தளையும் அவிழ்ந்தன; - உட்காணாய்

வாழ்தலின், ஊதியம் என்னுண்டாம்? வந்ததே,

ஆழ்கலத்து என்ன கலி'.

(பாடல் 12. அதிகாரம்: இளமை நிலையாமை)

'நட்பு' என்று ஒருவரை யொருர் பிணித்திருந்த பிணிப்புக்களும் அற்றுப் போயின. மனைவிமாரும் தம் அன்பின் அளவிலே குறைந்தவராய் விட்டார்கள். உற்றார் உறவினர் என்று ஒருவரோடொருவர் கொண்டிருந்த பிணிப்பும் கட்டவிழ்ந்து போய்விட்டது.

இவை எல்லாவற்றையும் உள்ளத்திலே எண்ணிப் பார்ப்பாயாக. இப்படி வாழ்கின்றதனாலே உண்டாகும் பயன்தான் என்ன? கடலிலே அமிழ்ந்து கொண்டிருக்கின்ற மரக்கலத்தைப் போன்ற துன்பமும்தான், உளக்கு இதோ வந்து விட்டதே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீ தடுப்பு விதிகளைப் பின்பற்றுவோம்!

பள்ளிக் கட்டட பரப்பளவுக்கு ஏற்ப வகுப்புப் பிரிவுகளின் எண்ணிக்கை - சிபிஎஸ்இ விதிகளில் திருத்தம்

சாதி மறுப்பு திருமணங்களில் காவல் துறை கட்டப்பஞ்சாயத்து -தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

காலம் வழங்கிய கொடை!

தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோராவுக்கு பிரியாவிடை அணிவகுப்பு: எஸ்.பி.கே.சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு

SCROLL FOR NEXT