அரண் போன்ற துறவு
இல்வாழ்க்கை என்னும் வாழ்விலே மிகவும் நெருக்கம் உடையவராயிருந்து, ஆசையின் வழியிலே செல்லுகின்ற அறிவு உடையவர்களுக்கு, தம் உயிருக்குப் பேரின்பத்தைத் தருகின்ற...
சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்,
பல்கழன்று, பண்டம் பழிகாறும்-இல்செறிந்து,
காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே
Advertisement
ஏம நெறிபடரும் ஆறு.
(பாடல் 13 அதிகாரம் இளமை நிலையாமை)
இல்வாழ்க்கை என்னும் வாழ்விலே மிகவும் நெருக்கம் உடையவராயிருந்து, ஆசையின் வழியிலே செல்லுகின்ற அறிவு உடையவர்களுக்கு, தம் உயிருக்குப் பேரின்பத்தைத் தருகின்ற அரண் போன்ற துறவு நெறியிலே மனஞ் செலுத்துவதற்கான வகையே இல்லாமற்போய் விடுகின்றது.
சொற்கள் தளர்வுற்றுப் போய், கையிலே தண்டினை ஊன்றிக் கொண்டு, தளர்ந்த நடையினை உடையவர்களாய்ப் பற்கள் அனைத்தும் கழன்று வீழ்ந்துபோக, அவர்களுக்கு உரிமையான உடலும் பழிக்கப்பட நேர்வதுதான், அவர்களுக்கு இறுதியிலே உண்டாவதாகும்.