வினைப்பயன் வந்தக்கால், வெய்ய உயிரா,
மனத்தின் அழியுமாம், பேதை; நினைத்ததனைத்
தொல்லையது என்றுணர் வாரே தடுமாற்றத்து
எல்லை இகந்தொருவு வார்.
(பாடல் 33 அதிகாரம்: அறன் வலியுறுத்தல்)
பழவினையானது வந்து சம்பவித்த காலத்திலே அறிவீனன், கடுமையாகப் பெருமூச்சு விட்டவனாக, தன் மனத்திலே அதனையே நினைந்து நினைந்து தளர்ந்து போவான்.
அந்தத் தீவினைப் பயனை ஆராய்ந்து, அது முற்பிறப்பின் அறக்கேட்டால் வந்து சம்பவித்தது என்று உணர்பவர்களே, பிறவித் துயரின் எல்லையை விட்டு நீங்கிப் பேரின்ப நிலையை அடைவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.