புரட்டிப் பார்த்தால் உள்ளே அழுக்கு
தோற்போர்வை மேலுந் துளைபலவாய்ப், பொய்ம் மறைக்கும்.
மீப்போர்வை மாட்சித்து, உடம்பானால்,-மீப்போர்வை.
பொய்ம்மறையாக், காமம் புகலாது, மற்றதனைப்
பைம்மபறியாப் பார்க்கப் படும்.
(பாடல் 42 அதிகாரம்: தூய்து அன்மை)
தோலாகிய போர்வையை மேலாகப் போர்த்துக் கொண்டதாகப் பலவான துளைகளை உடையதாகத், தன்னிடத்தேயுள்ள அசுத்தங்களை எல்லாம் மூடி மறைக்கின்ற ஆடை அணிகளாகிய மேற் போர்வையினால் மாட்சிமை உடையதாகத் தோன்றுவதுதான் உடம்பு. அப்படியானால், அந்த ஆடை அணிகள் ஆகிய மேற் போர்வையினால், உள்ளேயுள்ள பொய்ம்மைகளை மறைத்து, அதன்பால் நாமும் விருப்பமுடைய வராக அதனைப் புகழ்ந்து சொல்லாது அதனைப்-பையை உள்ளே திருப்பிப் பார்ப்பதுபோலப் புரட்டிப் பார்த்து, உள்ளேயும் அழுக்குப்பற்றிய உண்மையினைத் தெரிந்து கொள்ளல் வேண்டும். அதுவே அறிவுடைமை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.