முகப்பு
தமிழ்மணி

தலையோடு சொல்லும் சேதி

சுடுகாட்டிலே கிடக்கின்ற இறந்தவர்களுடைய தலையோடானது, தன்னைக் கண்டவர் நெஞ்சம் அச்சங் கொள்ளும்படியாகப் பள்ளமாகிக் குழிந்திருக்கிற கண்களை உடையதாகத் தோன்றி...

Updated On : 8 மார்ச், 2026 at 11:48 AM
பகிர்:

கழிந்தார் இடுதலை, கண்டார் நெஞ்சு உட்கக்,

குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி,-ஒழிந்தாரைப்

'போற்றி நெறிநின்மின்; இற்றிதன் பண்பு' என்று

சாற்றுங்கொல், சாலச் சிரித்து.

(பாடல் 49 அதிகாரம்: தூய்து அன்மை)

சுடுகாட்டிலே கிடக்கின்ற இறந்தவர்களுடைய தலையோடானது, தன்னைக் கண்டவர் நெஞ்சம் அச்சங் கொள்ளும்படியாகப் பள்ளமாகிக் குழிந்திருக்கிற கண்களை உடையதாகத் தோன்றி, ''உடலின்கண் பற்று ஒழித்த சான்றோரைப் போற்றி அவர்கள் நின்ற நெறியிலேயே நில்லுங்கள்; இவ்வுடம்பின் குணம் இறுதியில் இப்படிப்பட்டதுதான்'' என, மிகவுஞ் சிரித்துச் சொல்லும் போலும்! அத்தலையோட்டைக் காண்பவர்கள், உடலின் தூய்து அன்மையை உணர்ந்து நெறிப்படுதல்

கூடுமாதலால், 'அது சொல்லும் போலும் என்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →