வெள்ளிமணி

அத்திகிரி அருளாளன்

"தொண்டை நாடு சான் றோ ரு டைத்து.' இங்குள்ள காஞ் சி பு ரம் ஒரு புரா தன நக ர மா கும். இந் ந க ரம், சென் னையி லி ருந்து சுமார் 70 கி.மீ. தொலை வில் உள் ளது. "மஹா பாஷ் யம்' இயற் றிய பதஞ்ஜலி முனி வர் கி.மு.

ஸ்தலசய​னத்​து​றை​வார்

"தொண்டை நாடு சான் றோ ரு டைத்து.' இங்குள்ள காஞ் சி பு ரம் ஒரு புரா தன நக ர மா கும். இந் ந க ரம், சென் னையி லி ருந்து சுமார் 70 கி.மீ. தொலை வில் உள் ளது. "மஹா பாஷ் யம்' இயற் றிய பதஞ்ஜலி முனி வர் கி.மு. 2ம் நூற் றாண் டில் வாழ்ந் த வர். அவர் தனது நூலில் காஞ் சி பு ரத் தி னைப் பற் றிக் குறிப் பி டு கி றார். மணி மே கலை, பெரும் பா ணாற் றுப் படை போன்ற தொன் மைத் தமிழ் இலக் கி யங் க ளும் காஞ் சி பு ரத் தைப் பற் றிப் பேசு கின் றன. காளி தா சன், இந்த நக ரி னைக் குறிப் பி டும் போது "நக ரே ஷு காஞ்சி' என்று சிறப் பிக் கின் றான்.

பல் ல வர் கள், சோழர் கள், விஜ ய ந கர மன் னர் கள் ஆண்ட நக ரம் காஞ் சி பு ரம் ஆகும். 63 நாயன் மார் க ளில் சாக் கிய நாய னார், திருக் குறிப் புத் தொண் டர் ஆகி யோர் வாழ்ந்த இடம் ஆகும். பன் னிரு ஆழ் வார் க ளில் நான்கு ஆழ் வார் கள் காஞ் சி பு ரத் தில் அவ த ரித் த னர். திருக் கு ற ளுக்கு உரை எழு திய பரி மே ல ழ கர் காஞ் சி யைச் சேர்ந் த வர். புகழ் மிக்க ஸ்ரீ ஆதி சங் க ரர், பக வத் ராமா னு ஜர், வேதாந் தா சா ரி யார், ஸ்ரீ மண வாள மாமு னி கள் ஆகி யோ ரால் மேன்மை பெற் றது காஞ் சி பு ரம்.

"மோக்ஷ புரி' எனப் ப டும் முக்தி தரும் நக ரே ழில் காஞ் சி பு ர மும் ஒன்று ஆகும். மற் றவை} அயோத்யா, மதுரா, ஹரித் வார், காசி, அவந் திகா, துவா ரகா ஆகி யன. இதில் மூன்று நக ரங் கள் சைவர் க ளால் போற் றப் ப டு வன. மூன்று நக ரங் கள் வைண வர் க ளால் கொண் டா டப் ப டு கின் றன. காஞ்சி மட் டும் சைவ- வைணவ சம் பி ர தா யத் தி னர் இரு வ ரா லும் விரும் பப் ப டு கி றது. காஞ் சி பு ர மா னது ஜைன, புத்த மதத் தை யும் தன் ன கத்தே கொண் டது.

"வில்' போன்ற அமைப் பினை உடை யது காஞ்சி. ஸ்ரீகாஞ்சி வர த ரா ஜப் பெரு மாள் கோயில் உல கப் புகழ் பெற் றது. "கல் லு யர்ந்த நெடு ம திள் சூழ் கச்சி' என் ப தற் கேற்ப மிக உயர்ந்த ல் களை உடை யது இக் கோ யில்.

"கா' என்ற எழுத்து நான் மு க னைக் குறிப் பி டும். "அஞ்சி' என் றால் விஷ் ணுவை வணங் கிய இடம். திரு மாலை பிரம்மா வணங் கிய தலம் ஆன தால் காஞ் சி பு ரம் ஆயிற்று என் பது வைணவ மர பி னர் கருத்து.

108 வைணவ திவ்ய தேசங் க ளில் 14 திருத் த லங் களை உடை யது காஞ்சி. ஸ்ரீ வர த ரா ஜப் பெரு மாள் கோயில், காஞ் சி பு ரத் தின் கிழக் குத் திசை யில் உள் ளது. இது பல் ல வர் க ளால் கட் டப் பட் டது; சோழர் க ளால் திருப் பணி செய் யப் பட் டது; விஜ ய ந கர மன் னன் திரு மலை நாயக் க ரால் அரிய நகை கள், ஆப ர ணங் கள், விலை ப்பு மிக்க கற் கள் இக் கோ யி லுக்கு வழங் கப் பட் டுள் ளன.

வர தர் கோயில், ஐந்து பிரா கா ரங் களை உடை யது. முதல் பிரா கா ரம், கஜேந்தி ரன் என்ற யானைக்கு திரு மால் அருள் புரிந் ததை நினை வூட் டும் படி "ஹஸ் தி கிரி' மலை எனப் ப டு கி றது. இது கர்ப் ப கி ர ஹத்தை ஒட் டி யது ஆகும். இதை ஒட்டி வலம் வரும் பகுதி "வைய மாளிகை' எனப் ப டும். "வைய மாளிகை' என் றால் "பூமி யில் எம் பெ ரு மா னுக் கான பெரிய மாளிகை'யாகும். இரண் டா வது பிரா கா ரம் "திரு மலை பிர தட் சி ணம்' எனப் ப டும். மூன் றா வது பிரா கா ரத் தில் கரு டன், ஆதி சே ஷன், பெருந் தே வித் தாயார் திரு மஞ் சன மண் ட பங் கள், உற் சவ காலங் க ளில் எம் பெ ரு மான் திரு மஞ் ச னம் காணும் மண் ட பம், பவித் ரோத் ஸவ வாகன அறை, ஊஞ் சல் மண் ட பம் போன் றவை உள் ளன.

தாயார் சந் நி தி யும், மண் ட பங் க ளும், விஜ ய ந கர மன் னர் கள் ஆட் சி யில் கட் டப் பட் டது.

நான் கா வது பிரா கா ரம், "ஆழ் வார் திரு வீதி' எனப் ப டும். ஆழ் வார், ஆசார் யர் கள் சந் நிதி, பெரிய மண் ட பம், கிருஷ்ண, வராஹ, ரங் க நா தர் சிற் பங் கள் இதன் வெளிப் பு றத்தை ஒட் டி யுள் ளன. நடு வில் "அனந் த ச ரஸ்' எனப் ப டும் புஷ் க ரிணி உள் ளது. இந்த புஷ் க ரிணி புனி த மா ன தும், பழ மை யா ன தும் ஆகும். இந்த குளத் தில், மரத் தினா லான வர த ரா ஜப் பெரு மாள், நீருக் குள் எழுந் த ரு ளி யுள் ளார். அவர் "ஆதி அத் தி வ ர தர்' என் ற ழைக் கப் ப டு கி றார்.

இக் கோயி லில் எழுந் த ரு ளி யி ருக் கும் திரு மாலை, "அத் தி யூ ரான்' என்று பூதத் தாழ் வார் குறிப் பி டு கி றார். அரு ளா ளன், வர தன், தேப் பெ ரு மாள், ஹஸ் தி கி ரி நா தன், பேர ரு ளா ளன், தேவாதி தேவ ரா ஜன், தேவ ராஜ ஸ்வாமி, பிர ண தார்த் தி ஹ ரன், கரி வ ர தன், மாணிக்க வர தன் என்று பல வாறு இப் பெ ரு மாள் அழைக் கப் ப டு கி றார். கூரத் தாழ் வான் "கரி கிரிசா' என் கி றார். பெருந் தே வித் தாயார் படி தாண்டா பத் தி னி யா கை யால் அனந்த சர ஸில் நடை பெ றும் தெப் போற் ச வத் தில் மட் டும் பெரு மா ளு டன் எழுந் த ரு ளு கி றார்.

கி.பி. 1688ல் ஒü ரங் க சீப் படை யெ டுப் பில் காஞ் சி பு ர மும் இலக் கா கி யது. அப் போது அந் தப் படை யெ டுப் புக்கு அஞ்சி ஊர் மக் கள், திருச் சி ய ரு கே யுள்ள உடை யார் பாளை யம் கிரா மத் தில், வர தர் கோயில் உற் சவ மூர்த் தி களை பத் தி ர மாக வைத் த னர். பின், 1710ல் மீண் டும் காஞ் சி பு ரத் தில் பிர திஷ்டை செய்ய எண் ணி னர்.

ஆனால் அன் றைய உடை யார் பாளைய நிர் வாகி, சிலை களை எடுத் துத் தர மறுத் து விட் டார். பின் னர் ஸ்ரீமத் பர ம ஹம்ஸ ஆத் தாள் ஜீயர், அவ ரு டைய சீடர் லாலா தோடர் மால் ஆகி யோர் உடை யார் பா ளை யம் சென்று, விக் ர ஹங் களை மீட் ட னர். இன் றும் அதற் காக உடை யார் பா ளை யம் உற் ச வம் நடை பெற்று வரு வது குறிப் பி டத் தக் கது.

ஸ்ரீரங் கத் தில் உள்ள நம் பெ ரு மா ளின் நடை ய ழ கும், திரு ம லை யில் கிடைக் கும் வடை யின் ருசி யும், காஞ் சி பு ரம் வர த ராஜப் பெரு மா ளு டைய குடை அழ கும், திரு நா ரா ய ண பு ரம் செல் வப் பிள் ளை யின் உடை எழி லும் வைண வர் க ளுக்கு உகப் பூட் டு வன ஆகும்.

காஞ் சி யில் தற் போது "பிரம் மோற் ச வம்' நடை பெற்று வரு கி றது. அன் பர் கள் தரி சித்து, வர த னி டம் வரங் கள் பெற்று வள மு டன் வாழ்க!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா‌.சுப்பிரமணியன்

பாஜகவில் இணைந்த கமல்ஹாசன் பட நாயகி!

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

SCROLL FOR NEXT