முகப்பு
வெள்ளிமணி

வளம் தரும் வலம்புரி விநாயகர்!

தமிழ்நாட்டில் விநாயகரின் திருவுருவங்களை பல இடங்களில் காணலாம். அவ்வகையில் சென்னை, வடதிருமுல்லைவாயிலில் செந்தில்நகர் பகுதி அமைந்தவுடன் வலம்புரி விநாயகர் ஆலயம் உருவாக்கப்பட்டது. திருமுல்லைவாயில் ரயில் நி

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

தமிழ்நாட்டில் விநாயகரின் திருவுருவங்களை பல இடங்களில் காணலாம். அவ்வகையில் சென்னை, வடதிருமுல்லைவாயிலில் செந்தில்நகர் பகுதி அமைந்தவுடன் வலம்புரி விநாயகர் ஆலயம் உருவாக்கப்பட்டது. திருமுல்லைவாயில் ரயில் நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இவ்வாலயம்.

 இந்த ஆலயத்தின் குடமுழுக்கு விழா 1984ஆம் ஆண்டு நடந்தது. காலப்போக்கில் சிவன், லட்சுமி நாராயணர், பூர்ண - புஷ்கலை சமேத ஐயனார், வள்ளி தேவசேனாவுடன் ஆறுமுகன், லட்சுமி நரசிம்மர், சரபேஸ்வரர், நவகிரகங்கள் போன்ற தெய்வங்களுக்கும் கோஷ்ட தெய்வங்களுக்கும் சந்நிதிகள் ஏற்படுத்தப்பட்டு 2002ஆம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது.

 இவ்வாலயத்திற்கு இயற்கையாகவே வில்வமரம் தல விருட்சமாக அமைந்துள்ளது.

 ஆலய மண்டபத்தின் விதானத்தில் 32 வகை கணேச வடிவங்களை தரிசிக்கலாம். சிருஷ்டி தத்துவம் 64

 பிரிவுகளைக் கொண்டது. அவற்றிலிருந்து 32 தத்துவங்களின் மூலம் 32 கணேச வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

 இந்த ஆலயத்தில் மாதாந்திர, வருடாந்திர உற்ஸவங்கள் நடக்கின்றன. ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று பெரிய அளவில் அன்னதானம் நடத்தப்படுகிறது.

 தற்போது இந்த ஆலயத்தில் புதிதாக காலபைரவர் சந்நிதி நிர்மாணம் செய்வது உள்ளிட்ட பல்வேறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் குடமுழுக்கு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வலம்புரி விநாயகரை வாழ்வில் ஒருமுறையேனும் வழிபட்டு நீங்காத செல்வம் பெறலாம்.

 தகவல் அறிய : 94440 30248, 99400 71077.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.