வெள்ளிமணி

உழைத்துப் பிழைப்போம்!

உழைக்கும் உடலுறுதி உடையோர் உழைக்காது பிழைக்க எண்ணி பிச்சை கேட்பது ஹராம் (விலக்கப்பட்டது). இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் மேற்குறித்தபடி பிச்சை கேட்போரை சவுக்கால் அடித்து, தண்டித்து, கண்டித்து உழைத்

மு. அ. அபுல் அமீன்

உழைக்கும் உடலுறுதி உடையோர் உழைக்காது பிழைக்க எண்ணி பிச்சை கேட்பது ஹராம் (விலக்கப்பட்டது). இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் மேற்குறித்தபடி பிச்சை கேட்போரை சவுக்கால் அடித்து, தண்டித்து, கண்டித்து உழைத்துண்ண ஊக்கப்படுத்துவார்கள். ஆக்க வழியையும் காட்டுவார்கள். சம்பாதித்து உண்ணும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருவார்கள்.

 உடலுரமுடையோருக்கு உழைக்காமல் வாழ உதவுவது அவர்களை சோம்பேறிகளாக்கி வழிகேட்டில் வீழ்த்திவிடும். நாட்டின் மனித வளம் பயன்படுத்தப்படாமல் பாழாகி நாடும் நாசமடையும்.

 ""உயர்ந்த கை தாழ்ந்த கையை விட சிறந்தது. உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியது. தாழ்ந்த கை என்பது யாசிப்பது'' என்று நபிகள் நாயகம்(ஸல்) புகன்றது புகாரியில் 1429ஆம் எண்ணில் எழுதப்பட்டுள்ளது.

 மேலும் ""தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும் பொருளைப் பெற்றிருப்பவன் பிறரிடம் யாசித்தால் மறுமையில் முகத்தில் சதையின்றி வருவான்'' என்று எம்பெருமானார் இயம்பியதை இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிப்பது திர்மிதீ, நஸஈ கிதாபுகளில் காணப்படுகிறது.

 தன்னிடம் பொருளிருக்க அப்பொருளை மறைத்து, பதுக்கி, பாதுகாத்து யாதுமறியாதோரிடம் நோதலின்றி தோதுவாக ஆதரவு நாடி சாதாரணமாய் பொருளைக் கேட்பதால் மறுமையில் அருளைப் பெறாமல் அவதியுற நேரும் என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் திண்ணமாய்த் தெரிவிக்கிறார். இதை எண்ணிப் பார்த்து ஏற்பது என்னும் இகழ்ச்சியில் எவரும் ஈடுபடுதல் கூடாது.

 ""பொருளைப் பெருக்க யாசிப்பவன் நரக நெருப்புத் துண்டையே யாசிக்கிறான்'' என்று நேசர் நபிகளார் நவின்றதை ஹஜ்ரத் அபூஹீரைரா(ரலி) அறிவிப்பது முஸ்லீம் நூலில் பதியப்பட்டுள்ளது.

 தற்காலத்தில் குடும்பத்தினர் பெயரில் அல்லது குடும்பப் பெயரில் அறக்கட்டளைகள் அமைத்து வணிக நோக்கில் தொண்டு நிறுவனங்களைத் துவக்கி துலாக்கோலில் நிறுக்க முடியாத அளவிற்கு ஆதாயம் அடைவோர் மக்களிடம், மாணவர்களிடம் நிதிகேட்பது நீதிக்குப் புறம்பானது என்பது இக்கூற்றிலிருந்து பெறப்படும் உண்மை. ஈயென இரத்தல் தீயினும் தீய தீமை என்று தெரிந்து, தெளிந்து ஏற்பது இகழ்ச்சி என்பதை ஏற்று இலவசங்களில் இன்பம் காணாது உழைத்துப் பிழைப்போம். உயர்வாய் வாழ்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT