முகப்பு
வெள்ளிமணி

எது மதுர பக்தி?

வேகானந்தரிடம் ஒருவர் "பக்தியில் சிறந்த பக்தி எது?'' என்று கேட்டார்.

Updated On : 20 ஜூன் 2013, 3:25 pm IST
பகிர்:

வேகானந்தரிடம் ஒருவர் "பக்தியில் சிறந்த பக்தி எது?'' என்று கேட்டார். அதற்கு அவர், "ஒரு பெண் தன்னுடைய தந்தை, தாய், நண்பன் எல்லோரிடமும் ஒவ்வொரு விதமான அன்பைக் காட்டுகிறாள். அவை ஒவ்வொன்றுமே ஓர் அளவின் எல்லைக்கு உட்பட்டதாகும். ஆனால், ஒரு பெண் தனது கணவனிடம் மட்டுமே இப்படி அளவுக்கு உட்படாத அன்பை காட்டுகிறாள். எதையும் மறைக்காமல் அன்பைப் பொழிந்து மகிழ்ச்சி அடைகிறாள். கணவன் - மனைவி உறவே அன்புப் பிணைப்பில் மிகவும் சிறந்தது. இப்படி அமையும் பக்திக்கு "மதுர பக்தி' என்று பெயர்.அப்படிப்பட்ட பக்தியுடன் உள்ளம் திறந்து, எந்த விதமான ஒளிவு மறைவும் இன்றி, "எல்லாம் நீயே' என்று சொல்லி இறைவனை சரணடைந்து ஒன்றரக் கலக்கும் நிலையே மிகச் சிறந்த பக்தி நிலையாகும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.