முகப்பு
வெள்ளிமணி

காழியூரில் அருளும் வீரட்டீஸ்வரர்!

சிவபெருமானின் சிறந்த வீரச்செயல்கள் நிகழ்ந்துள்ள தலங்கள் எட்டினை "அட்டவீரட்டம்' எனக் கூறுவர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:30 PM
பகிர்:

சிவபெருமானின் சிறந்த வீரச்செயல்கள் நிகழ்ந்துள்ள தலங்கள் எட்டினை "அட்டவீரட்டம்' எனக் கூறுவர். இந்த அஷ்டவீரட்டத் தலங்களாக திருக்கண்டியூர், திருக்கோயிலூர், திருஅதிகை, திருக்குறுக்கை, திருக்கடவூர், திருப்பறியலூர், திருவிற்குடி, வழுவூர் ஆகியவை அழைக்கப்படுகின்றன. இந்த எட்டு தலங்களில் உள்ள மூர்த்திகளின் நாமங்களை விரும்பிப் போற்றினாலும் அல்லது இத்தலங்களுக்கு வந்து அவர்களை தியானித்து நமஸ்கரித்தாலும் காலனுடைய தூதுவர்கள் நம்மிடம் நெருங்க மாட்டார்கள் என்பது ஐதீகம்.

இப்படிப்பட்ட பெருமையுடைய சிவபெருமான் வீரட்டீஸ்வரராக அருள்புரியும் திருக்கோயில் ஒன்று மிகவும் பாழடைந்து தகுந்த பராமரிப்புக்காகக் காத்திருக்கிறது.

காஞ்சிபுரம் - செய்யாறு நெடுஞ்சாலையில் புளியரம்பாக்கம் அருகில் உள்ளது காழியூர் கிராமம். இங்குள்ள காமாட்சி அம்மன் சமேத வீரட்டீஸ்வரர் திருக்கோயில் 1000 ஆண்டுகள் பழைமையானது. இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெருமையுடையது. தேவாரப் பாடல் பெற்ற திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் முதல் பிராகார வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டு காழியூர் முக்கியத்துவம் பற்றிக் கூறுகிறது.

ஒரு சிவாலயத்திற்கு உரிய அனைத்து சந்நிதிகளும் அமையப்பெற்று ஒரு காலத்தில் திருவிழாக்கள் கண்ட இந்த ஆலயம் தற்போது மிகவும் சிதிலமடைந்து புதர்கள் மண்டியுள்ளன. இறைவனின் கருவறை வெளவால்களின் உறைவிடமாக உள்ளது. குடமுழுக்கு நடந்தேறி பல வருடங்கள் ஆன நிலையில் தற்போது திருப்பணி நடந்துகொண்டிருக்கிறது.

தகவலுக்கு: 87545 41587.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.