இயற்கை ஏற்றி வைத்த ஒளி விளக்கு சூரியன். சூரியனின் மத்தியில் பர்க்கன் என்ற பெயரில் வீற்றிருக்கும் சிவபெருமானையும் அவனுடைய திவ்ய மங்கள ஜோதியையும் துதிப்பது காயத்ரி மந்திரம். இந்த மந்திரத்தைக் குறிக்கும் தீபம் காயத்ரி தீபம் என்று அழைக்கப்படுகிறது. இதன் நடுவில் ஐந்து முகங்களும் பத்து கரங்களும் கொண்ட காயத்ரி தேவி அமர்ந்திருக்கிறாள். இவளைச் சுற்றியுள்ள பிரபா மண்டலத்தில் ஐந்து சுடர்கள் பிரகாசிக்கின்றன. இதை இறைவன் முன்பாகக் காட்டும்போது ஓம்பூர்: புவ: சுவ: என்று தொடங்கும் காயத்ரி மந்திரம் ஓதப்படுகிறது. இதன் பொருள் ஓம் பூலோகம், சுவர்க்கலோகம், பாதாள லோகம் ஆகிய மூன்று உலகங்களிலும் எவன் நம்முடைய புத்தியினை நன்றாக நடத்துகிறானோ அந்த ஒளி வடிவான (சூரியனின் மையத்தில் இருக்கும்) பர்க்கன் என்கிற தேவனுடைய மகிமைகளைத் தியானிக்கிறேன் என்பதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.