திருச்செந்தூரில் பெருவிழாவின் போது ஏழாம் திருநாளில் விடியற்காலம் ஆறுமுக நயினார் அமர்ந்திருக்கும் பீடத்திலிருந்து எழுந்தருளல் செய்வதற்கு நல்ல நேரம் குறிக்கப்பெற்றிருக்கும்.
பிள்ளையன் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய முறைகளோடு, ஆறுமுக நயினார் முன்னிலையில் ஆராதனைகள் செய்யப்படும். குறிப்பிட்ட நல்லோரையில், மூலவர் சந்நிதிக்கு எதிரில் அமைக்கப்பெற்றிருக்கும் தாழ்ந்த பீடத்திற்கு உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆறுமுக நயினாரை இறக்கமாக இவ்விரு பீடங்களுடனும் இணைக்கப்பட்டுள்ள பலகையின் வழியாக, சிறிது சிறிதாக அசைத்து நகர்த்திக்கொண்டு வந்து சேர்த்து, மூலஸ்தான சுப்பிரமணிய சந்நிதியைப் பார்க்க வைத்து, ஆராதனை செய்து புறப்பாடு செய்வார்கள். இதனை "உருகு பலகைக் காட்சி' என்பார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.