முத்திக்கொரு வித்தாகிய தென்னாட்டில் சான்றோருடைத்த தொண்டை மண்டலத்தின் தலைநகராக விளங்குவது காஞ்சி மாநகர். "நகரேஷு காஞ்சி' என்று காளிதாசனால் போற்றப்பட்ட அந்நகரின் தென்மேற்கு திசையிலும், திருஞானசம்பந்தரால் பாடப்பெற்று ஆண் பனை பெண் பனையான செய்யாறு திருவோத்தூரின் வடக்கு திசையிலும் உள்ள அசனமாப்பேட்டை கிராமத்தில் ஸ்ரீ பர்வதவர்த்தினி சமேத ஸ்ரீ இராமநாத ஈஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது.
தற்போது இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் இத்திருக்கோயிலுக்கு திருப்பணி செய்து கொண்டிருக்கின்றனர். அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வருகிற ஆவணி மாதம், 31ஆம் தேதி, திங்கள் கிழமை நடைபெறுகிறது.
அமைவிடம்: செய்யாறிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், காஞ்சிபுரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும் அசனமாபேட்டை அமைந்துள்ளது.
தகவலுக்கு: 9865581148.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.