சுற்றியுள்ள கயிற்றை அவிழ்ப்பதற்கு ஒரு வழிதான் உண்டு. எப்படிச் சுற்றினோமோ அப்படியே மறுபடியும் திருப்பி அவிழ்க்க வேண்டும். அதைப் போலவே தவறான செயல்களை நற்செயல்களினாலும், பாவங்களைப் புண்ணியங்களினாலும் போக்கிக் கொள்ள வேண்டும்.
தானம், தர்மம், கடமை புரிதல், பகவந் நாமாக்களை (தெய்வப் பெயர்கள்) உச்சரித்தல், கோயில்களைத் தரிசித்தல் ஆகிய நல்ல செயல்கள் எல்லாம், பாவம் தொலைக்கும் வழிகளாகும். மனத்தினால் செய்த பாவங்களை மனத்தாலும், கைகள், கால்களால் செய்த பாவங்களை அந்தந்த உறுப்புகளினாலும் மட்டுமே தீர்க்க முடியும்.
வெளியில் இருந்து வரும் பொருள்களில் மட்டுமே மகிழ்ச்சி இருப்பதாக எண்ணி அவற்றை சுற்றியே மனிதன் துரத்திக்கொண்டு ஓடுகிறான். வெளியில் இருப்பது எதுவும் நம் வசத்தில் இருப்பதல்ல. அது வந்தாலும் வரும். போனாலும் போகும். தனக்குள்ளே ஆனந்தம் இருப்பதை மனிதன் மறந்துவிடுகிறான்.
நமக்குள் இருக்கும் மகிழ்ச்சி பெரிய சமுத்திரம் போன்றது. பதவி, பணம், பெயர், புகழ் என்று வெளியில் நாம் எதிர்பார்க்கும் எல்லாமே சொட்டுத் தண்ணீருக்கு சமமானது. இதை முற்றிலும் உணர்ந்த ஞானிகள் வெளி இன்பத்தைத் தேடி அலைவதில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.