முகப்பு
வெள்ளிமணி

முப்பிடாதி அம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கு அருகில் உள்ள அவலூர்பேட்டை கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு மன்னார்சாமி

Updated On : 7 ஆகஸ்ட், 2014 at 4:36 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:35 AM

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கு அருகில் உள்ள அவலூர்பேட்டை கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு மன்னார்சாமி சமேத பச்சையம்மன் ஆலயத்தில் 2 ஆவது மகா கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த வைபவத்தில் தவத்திரு. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், தவத்திரு. கலவை சச்சிதானந்த

சுவாமிகள் பங்கேற்கின்றனர். திருவிழா நிகழ்ச்சிகளை அருள்மிகு ஸ்ரீ மன்னார்சாமி சமேத அருள்மிகு பச்சையம்மன் ஆலய நல அறக்கட்டளை செய்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பா சமுத்திரம் வட்டம், தென் திருவாரூர் எனப்படும் இடைகால் கிராமத்தில் செங்குந்தர் சமுதாயத்திற்குப் பாத்திய பட்ட அருள் தரும் முப்பிடாதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி முளைப்பாரித் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது.

Advertisement

வேண்டியவருக்கு வேண்டியதை அருளும் அம்பிகைக்குக் காலங்காலமாய் முளைப்பாரித் திருவிழா நடைபெற்று வருவது சிறப்பான ஒன்றாகும். முலைப்பாரி திருநாளன்று, காலையில் பால்குடத்துடன் தொடங்கி, மதியம் சிறப்பு அபிஷேகம் ஆராதனையுடன் மாலையில் ஊர் விளையாட்டும், இரவில் படையலிட்டும் மக்கள் முப்பிடாதி அம்மனை வழிபடுவர். பக்தர்கள் தங்கள்

எண்ணங்கள் ஈடேற முப்பிடாதி அம்மனைத் தரிசித்து அருள்பெற்று இன்புறலாம்.

தொடர்புக்கு: 92457 00787.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.