முகப்பு
வெள்ளிமணி

துர்க்கை வடிவங்கள்!

திருத்தணிக்கு அருகில் மத்தூர் என்ற இடத்தில் உள்ள துர்க்கை திருவுருவின் கீழ்புறம், மகிஷனின் முழு உருவம் காணப்படுகிறது.

Updated On : 11 நவம்பர், 2017 at 5:26 PM
பகிர்:

திருத்தணிக்கு அருகில் மத்தூர் என்ற இடத்தில் உள்ள துர்க்கை திருவுருவின் கீழ்புறம், மகிஷனின் முழு உருவம் காணப்படுகிறது.  புதுக்கோட்டை மலையப்பட்டி குடவரை சிவன் கோயிலில் தாமரை மலரில் நின்ற கோலத்தில் எட்டு கரங்களுடன் காட்சி தருகிறாள் துர்க்கை. கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் தேவபுரீஸ்வரர் திருக்கோயிலில் வடக்கு வாயிலில் அஷ்டபுஜ துர்க்கை அருள்புரிகிறாள். எட்டுக்கரங்களுடைய இந்த துர்க்கையின் கரங்களில் ஒன்றில் கிளியை வைத்திருப்பது சிறப்பாகும்.  

திருநெல்வேலியிலிருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் கங்கை கொண்டான் திருத்தலத்திற்கு அருகில் உள்ள பிராஞ்சேரி என்னும் இடத்தில் படுத்திருக்கும் கோலத்தில் சயன துர்க்கையை காணலாம்.  

வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் ஆலயத்திலும் கும்பகோணம் அருகில் உள்ள அம்மன் குடியிலும் திருவாரூர் ஆந்தக்குடியில் உள்ள சோமேஸ்வரர் ஆலயத்திலும் துர்க்கை தெற்கு நோக்கி அருள்கிறாள். விழுப்புரம், திருவக்கரை திருத்தலத்தில் அருள்புரியும் வக்ரகாளியம்மன் கோயிலில் அருள்புரியும் துர்க்கை தலை சாய்ந்த கோலத்துடன் வடக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். சுருட்டப்பள்ளி, பள்ளி கொண்ட ஈஸ்வரன் கோயிலில் பிடாரியின் மீது நிற்கும் கோலத்திலும்; தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலிலுள்ள துர்க்கை ஆறுகரங்களுடன் காட்சிதருகிறாள்.  கங்கைகொண்ட சோழபுரத்தில் பதினெட்டு கரங்களுடன் ஒரு பெரிய துர்க்கை திருமேனி உள்ளது.  இது ராஜேந்திர சோழன்
கங்கை வரை படையெடுத்துச்சென்றபோது கொண்டுவந்த வெற்றிச் சின்னமாகும்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.