வெள்ளிமணி

பொன்மொழிகள்!

எழுந்திருங்கள்! விழித்துக்கொள்ளுங்கள்! சிறந்த ஆச்சாரியர்களை அடைந்து ஞானத்தைப் பெறுங்கள்.

சுவாமி கமலாத்மானந்தர்

எழுந்திருங்கள்! விழித்துக்கொள்ளுங்கள்! சிறந்த ஆச்சாரியர்களை அடைந்து ஞானத்தைப் பெறுங்கள்.
- கட உபநிஷதம்

கங்கை நதி பாவத்தைப் போக்கும். மதி நிலா உஷ்ணத்தைப் போக்கும். கற்பக மரம் வறுமையைப் போக்கும். ஆனால் சாதுக்களின் சேர்க்கை பாவம், தாபம், வறுமை ஆகிய மூன்றையும் உடனே போக்கும்.
- ஒரு சமஸ்கிருத சுலோகம்

சான்றோர் இனத்தில் இரு. பெரியாரைத் துணைக் கொள்.
- ஆத்திசூடி

பராசக்தியை முதலில் இந்த உலகத்திலே கண்டு வணங்க வேண்டும். நட்சத்திரங்கள் எல்லாம் அவளுடைய விழிகள். தீயும் காற்றும் அவளுடைய வேகம். மண் அவளுடைய திருமேனி. இருப்பதெல்லாம் அவளுடைய கலைதான். அவளை அகத்திலே கண்டு போற்றி நலம் பெற வேண்டும்.
- மகாகவி பாரதி

மரணத்துக்குப் பின்பும், மனிதனுடன் கூடச் செல்லும் ஒரே தோழன் தர்மம்தான்.
- மனு

மோட்சம் அடைவதற்கு உலகப்பற்றின்மை, ஆத்மஞானம், பக்தி ஆகிய மூன்றும் முக்கியமானவை. 


ஆத்மா ஒன்றையும் அனுபவிக்காமலேயே ஆனந்தமாக விளங்குகிறான்.

சாஸ்திரம், குரு, ஆத்மா ஆகிய மூன்றாலும் "ஆத்மஞானம்' ஏற்படுகிறது.

இந்த உலக வாழ்க்கை என்பது ஓர் ஆழமான சமுத்திரம். இதில் உலக ஆசைகள் என்ற தண்ணீர் நிரம்பியிருக்கிறது. அதனால் இந்தச் சமுத்திரம் கடக்க முடியாததாக இருக்கிறது. இதைக் கடக்கும் பொருட்டு இறைவன் ஜீவனுக்கு மனித உடல் என்ற படகை வழங்கியுள்ளான்.

ஆத்மானந்தம்தான் விஷ்ணு சொரூபம். அவரிடம் மனம் லயித்தவர்களுக்கு "நான், நீ, மற்ற உலகம்' முதலிய வேற்றுமைகள் தோன்றுவதில்லை.
- ப்ரபோத சுதாகரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT