முகப்பு
வெள்ளிமணி

நிகழ்வுகள்

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் காவேரி கரையில் சக்தி வாய்ந்த குல தெய்வங்களாக விளங்கும் அருள்மிகு நாவலடியான், அருள்மிகு காளியம்மன் திருக்கோயில்கள் அமைந்துள்ளன.

Updated On : 30 ஜனவரி, 2024 at 3:56 PM
பகிர்:

மஹாகும்பாபிஷேகம்

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் காவேரி கரையில் சக்தி வாய்ந்த குல தெய்வங்களாக விளங்கும் அருள்மிகு நாவலடியான், அருள்மிகு காளியம்மன் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இல்வாலயத்திலுள்ள விமானங்கள், சந்நிதிகளுக்கு பக்தர்களின் நன்கொடை மூலமே திருப்பணிகள் செய்யப் பெற்றுள்ளன. இங்கு, நாவலடி கருப்பண்ண சுவாமி, நாவலடி பெரியசாமி, பட்டமரத்தான் காவல் தெய்வங்கள் அமைந்து மக்களைக் காத்தருள்கின்றனர். இக்கோயில்களுக்கு புதியதாக 60-அடி உயரத்தில் ராஜகோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாலயங்களின் திருக்குட முழுக்கு 17.6.2018 -ஆம் தேதி, காலை 5.30 மணிக்கு விநாயகர், காளியம்மன், பரிவார கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து 9.00 மணிக்குமேல் ஸ்ரீசெல்லாண்டியம்மன், ஸ்ரீநாவலடியான் திருக்கோயிலின் ராஜகோபுர மகா கும்பாபிஷேகமும் தொடர்ந்து மகா அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடைபெறும். முன்னதாக, யாகசாலை பூஜைகள் ஜூன் 13, 14, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றது.

தொடர்புக்கு: 93455 56333/ 94432 21001. 

பிரம்மோற்சவ பெருவிழா

சென்னை, சைதாப்பேட்டை அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை சௌந்தரேசுவரர் திருக்கோயிலில் ஜூன் 11 - முதல் ஆனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழா, ஜூலை 22 - ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. ஜூன் 17 - திருத்தேர் உற்சவம், ஜூன் 18- பரிவேட்டை, ஜூன் 20 - ஆனித் திருமஞ்சனம், தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் அமைந்துள்ள ஸ்ரீகல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாளுக்கு நாட்டின் நலன் கருதியும் பஞ்சம் தவிர்க்க வேண்டியும் காலத்தில் பருவ மழை பெய்ய வேண்டியும் விவசாயம், வியாபாரம் மற்றும் தொழில்கள் மேன்மையும் வளமும் பெறவேண்டியும் பக்தர்களின் விருப்பங்கள் நிறைவேறவும் வேண்டி, பிரம்மோற்சவ பெரு விழா தொடங்கி.து. தினமும் அன்னவாகனம், பல்லக்கு, சிம்ம வாகனம், அனுமந்த வாகனம் நடைபெறும். மேலும் ஜூன் 15 - கருட சேவையும், ஜூன் 18, மாலை திருக்கல்யாண உற்சவமும் தொடர்ந்து, ஜூன் 20 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு நூதன திருத்தேர் உற்சவமும் நடைபெறும். ஜூன் 21- தீர்த்தவாரி உற்சவமும் ஜூன் 22 -வசந்த உற்சவமும் நடைபெறுகின்றன.

தொடர்புக்கு: 96775 00586 / 94429 57143.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.