வெள்ளிமணி

நிகழ்வுகள்

தினமணி

ஸ்ரீ வித்யா கூட்டு வழிபாடு

உலக நலன் வேண்டி "ஸ்ரீ வித்யா' கூட்டு வழிபாடு சென்னை ஆதம்பாக்கம் 5- ஆவது குறுக்குத் தெரு, பிருந்தாவன் நகர் விரிவு பகுதியில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் ஸ்ரீ குருவாயூரப்பன் திருக்கோயிலில் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 99627 86943 / 8056136031.
நாள்: 18.03.2018, நேரம்: மாலை 4 மணி. 

பங்குனிப் பெருவிழா

அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழா மார்ச் -22 கொடியேற்றத்துடன் துவங்குகின்றது. முக்கிய நாள்கள்: மார்ச் 24 - அதிகாரநந்தி சேவை, மார்ச் 28 - திருத்தேர், மார்ச் 29 - அறுபத்து மூவர் பெருவிழா, மார்ச் 31 - தீர்த்தவாரி, திருக்கல்யாணம் - தொடர்ந்து ஏப்ரல் 2 - முதல் விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.


பங்குனி உத்திர மகோத்சவம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டத்தில் உள்ள திருச்சோற்றுத்துறை அருள்மிகு அன்னபூரணி அம்பிகா சமேத ஓதனவனேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர மகோத்சவம் மார்ச் 21- கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நாட்கள்: மார்ச் 24 - கைலாச வாகனம், மார்ச் 27 - அதிகார நந்திவாகனம், மார்ச் 29 - திருத்தேர், மார்ச் 30 - தீர்த்தவாரி மார்ச் 31 - கண்ணாடி பல்லக்கு.

திருக்குட நன்னீராட்டு விழா

சிவகங்கை மாவட்டம், அரியக்குடி, அருள்மிகு திருவேங்கட முடையான் திருக்கோயிலில் திருக்குட சம்ப்ரோக்ஷண நன்னீராட்டு விழா மார்ச்- 26 , காலை 06.18 முதல் 07.18 மணியளவில் நடைபெறுகின்றது. யாக சாலை பூஜைகள் மார்ச்- 22 ஆரம்பமாகிறது.


திருப்பணி

தாம்பரம் சேலையூர் கணேஷ் நகரில் உள்ள ஸ்ரீ சத்குரு சாந்தானந்த ஸ்வாமிகள் டிரஸ்ட் சார்பில் திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் அடி அண்ணாமலை ஆலயத்திற்கு அருகில் உள்ள ஓம் நகரில் ஸத்குரு சாந்தானந்த சுவாமிகளின் தியான மண்டபம் அமைக்கும் திருப்பணி நடைபெறுகின்றது. இந்த தியான மண்டபத்தில் ஸ்ரீ கணபதி, தட்சிணாமூர்த்தி, காஞ்சி மகாசுவாமிகள், சாந்தானந்த ஸ்வாமிகள் உருவச்சிலைகள் மற்றும் மகான்களின் திரு உருவப்படங்களும் பிரதிஷ்டையாக உள்ளன. பக்தர்கள் தங்கும் அறை, அன்னதான கூடம், ஆன்மீக நூலகமும் நிறுவப்பட உள்ளன.
தொடர்புக்கு: 81480 00910 / 944420 0910.


பன்னிரு திருமுறை இசைவிழா

வேத ஆகம தெய்வ தமிழிசை மன்றம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ண கான ஸபா இணைந்து நடத்தும் 13 ஆம் ஆண்டு பன்னிரு திருமுறை இசை விழா மார்ச் -16 இல் தொடங்கி 19 வரை, சென்னை தி.நகர் டாக்டர் சந்தானம் சாலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் நடைபெறுகின்றது. இதனையொட்டி பிரதி தினமும் காலை 8.00 மணியிலிருந்து 9.00 மணி வரை தேவார இன்னிசை கச்சேரிகள், சொற்பொழிவுகள், ஹரிகதை, திருமுறை நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 
தொடர்புக்கு: 92821 21798 / 044 2814 0587.


அரனருள் சார்பில் நடைபெறும் பதினைந்தாம் ஆண்டு பன்னிரு திருமுறை இசைவிழா மார்ச் 26 - இல் தொடங்கி ஏப்ரல்- 6 வரை, சென்னை தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தருமபுர ஆதீனம் சமயப்பிசார நிலையத்தில் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 94441 56335/ 044 2378 2333.


பூச்சொரிதல் விழா

சென்னை, புழல், காவாங்கரை (கிழக்கு) தனலட்சுமி நகர் அருள்மிகு மகமாயி சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் 9-ஆம் ஆண்டு, பூச்சொரிதல் விழா நடைபெறுகின்றது. பூச்சொரிதல் நடைபெறும் நாள்கள், மார்ச் - 18, 25 மற்றும் ஏப்ரல்- 1, 8 தேதிகள். பக்தர்கள் புஷ்பங்கள் கொண்டு வந்து தாங்களாக மூலவருக்கு சமர்ப்பிக்கலாம்.
தொடர்புக்கு: 97911 28962.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT