முகப்பு
வெள்ளிமணி

நம்பாத தோமாவும் நம்ப வைத்த இயேசுவும்

நம்பிக்கை என்ற சொல் உணர்வுபூர்வமான மனம், சிந்தையும் நம்உடலும் ஆன்மாவும் சேர்ந்து எண்ணம் ஆகும். கண்டு நம்புகிறோம்; காணாமல் நம்புகிறோம். இதனை, நம் உள்ளமும் உடலும் ஆன்மாவும் ஏற்றுக்கொள்கிறது.

பகிர்:

நம்பிக்கை என்ற சொல் உணர்வுபூர்வமான மனம், சிந்தையும் நம்உடலும் ஆன்மாவும் சேர்ந்து எண்ணம் ஆகும். கண்டு நம்புகிறோம்; காணாமல் நம்புகிறோம். இதனை, நம் உள்ளமும் உடலும் ஆன்மாவும் ஏற்றுக்கொள்கிறது. உலகம் நம்பிக்கையில் தான் சுழல்கிறது. நம் வாழ்வும் நம்பிக்கையிலேயே சுழல்கிறது. நம்பிக்கை உடையவர்களும் நம்புவோரும் ஒரு தெய்வ குணத்துடன் செயல்படுகின்றனர். அதாவது, தம்மை நம்பினவரை காப்பாற்றுவதும் அவருக்கு உதவிச் செய்வதும் காப்பதும் எந்நாளும் அன்பு கொள்வதுமே ஆகும்.
நாம் இறைநம்பிக்கையுடன் இறைவன் உள்ளார். அவர் இவ்வுலகத்தைப் படைத்தார். வானம், நிலவு, சூரியன் மற்ற உயிர் இனங்களைப் படைத்தவர் அவரே. அவரின் அன்பு நம்மை வாழ வைக்கிறது. நம்பிக்கை உறவை பலப்படுத்துகிறது. மனைவி கணவனையும் பிள்ளைகளையும் உறவினர்களையும் இணைக்கிறது. நம்பிக்கை அன்பின் ஊற்று, பாசத்தின் வலை! நம்பிக்கை காப்பாற்றாமல் போனால் நம்பிக்கை துரோகி என்கிறோம். நம் வாழ்வை இறைவனோடு நம்பிக்கை பாலம் அமைப்போம்.
வேதாகமத்தில் இறைவனை நம்பினோர்கள் வரலாறு உள்ளது. இறை நம்பிக்கையுள்ளோர் வாழ்ந்தனர், சாதித்தனர். வரலாற்றில் தன் பெயர்களை பொறித்தனர். ஆபிரகாம் தன் தெய்வத்திடம் வைத்த நம்பிக்கையால் அவர் இறைவனின் நண்பனாக, செல்வ சீமானாக மக்கள் இனத்தின் தந்தையாக மதிக்கப்படுகிறார். 
ஆண்டவராகிய இயேசு தம்மிடம் பன்னிரண்டு சீடர்களை சேர்த்துக்கொண்டார்.  அவர்களுக்கு இறைநம்பிக்கையை உணர்த்தினார். தோமா என்பார் அவரின் சீடர். மூன்று வருடம் ஆறு மாதம் இயேசுவுடனே வாழ்ந்தார். இயேசு இறை மைந்தன் இவ்வுலகத்துக்கு பாவ மன்னிப்பு அருள வந்தவர். மனிதரின் பாவ சாபம் நீங்க, பாவ நிவாரண பலியாக பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு ரத்தம் சிந்தி மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார் என்பதை இயேசு கூறி இருந்தார். 
இயேசு ஆண்டவர் சொல்லியப்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். உயிர்த்தெழுந்த இயேசு தம் சீடர்களுக்கு காட்சி தந்தார். கதவுகள் பூட்டியிருக்கையில் இயேசு வந்து நடுவே, நின்று உங்களுக்கு சமாதானம் என்றார். (யோவான்: 20: 19) சீடர்கள் இயேசுவை தரிசித்து உயிர்த்த இயேசுவை நம்பினார்கள். ஆனால் தோமா என்ற சீடர், இயேசு காட்சி அளித்தபோது அங்கு இல்லை. மற்ற சீடர்கள் சொன்னபோது, "நான் நம்பமாட்டேன். ஆணி பதித்த கையின் காயத்தில் என் விரல் வைத்துப் பார்த்துதான் நம்புவேன்' என்றார். 
எட்டு நாள்களுக்குப்பிறகு, இயேசு தம் சீடர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது அங்கே சீடர் தோமாவும் இருந்தார். பின்னர், அவர் தோமாவை நோக்கி, "நீ உன் விரலை இங்கே நீட்டி என் கைகளைப் பார். உன் கையை நீட்டி என் விலாவிலே போடு. அவிசுவாசியாயிராமல் விசுவாசியாய் இரு' என்றார் (யோவான் 20: 27).  
தோமா உயிர்த்த இயேசுவை நம்பினார். இச்சீடர் தோமா இந்தியா வந்தார். கேரள கடற்கரை வந்து இறங்கினார். புனிதர் தோமாவின் நம்பிக்கை, நமது தேசம் இயேசுவை பெற்றுக்கொண்டது. இறைவனிடம் நம்பிக்கை வைப்போம்;  இறையருள் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.