வெள்ளிமணி

பொன்மொழிகள்!

ஒருவனுடைய மனதில் காமவாசனை இருக்குமானால், அவனுக்கு எங்கும் காமமே தென்படும். ஒருவன் மனதில் நாராயணன் நினைவு சரியாக இருந்தால், அவனுக்கு எங்கும் நாராயணனே தென்படுவான்.

சுவாமி கமலாத்மானந்தர்

ஒருவனுடைய மனதில் காமவாசனை இருக்குமானால், அவனுக்கு எங்கும் காமமே தென்படும். ஒருவன் மனதில் நாராயணன் நினைவு சரியாக இருந்தால், அவனுக்கு எங்கும் நாராயணனே தென்படுவான்.

 -பாகவதம் தரும் நற்சிந்தனை.

ஆமை தனக்கு ஆபத்து வரும்போது, தன் அங்கங்களை எல்லாப் பக்கங்களிலிருந்தும் உள்ளே இழுத்துக்கொள்கிறது. அது போலவே எவன் தன்னுடைய எல்லா ஆசைகளையும் உள்ளே இழுத்துக்கொள்கிறானோ, அவனுடைய அந்தக்கரணத்தில் ஜோதிஸ்வரூபமான ஆத்மா பிரகாசிக்கிறது.

 -மகாபாரதம்

பறவைகளும் விலங்குகளும் மலைக்காடுகளில் கொழுந்து விட்டெரியும் தீயில் பாதுகாப்பைத் தேடாது. அதுபோலவே தீய எண்ணங்கள் பிரம்மத்தை அறிந்தவன் மனதில் உண்டாகாது.            

-யோகவாஷிட்ட சாரம்

""வயதினாலன்று, நரையினாலன்று, பொருளினாலன்று, உறவினர்களினாலன்று; எவர் அங்கங்களோடு வேதத்தைக் கற்றுணர்ந்தவரோ அவரே நம்முள் பெரியவர்'' என்று ரிஷிகள் தர்மத்தை ஏற்படுத்தினார்கள்.

 -மனுஸ்மிருதி

ஒருவருக்கு நல்ல புத்தியும் மன ஒருமைப்பாடும் சேர்ந்த வாழ்க்கை அமைய வேண்டும். அந்த வாழ்க்கை வெண்ணிற ஆடையில் வண்ணம் கலந்தது
போல், நாளடைவில் நன்னடத்தை வாழ்க்கையாகப் பரிமளிக்கும்.

-வியாத கீதை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT