வெள்ளிமணி

பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

DIN

• விடாமுயற்சியுடன் ஆன்மிக சாதனைகளைப் பழகுபவனுக்கு இறைவன் அருள்புரிகிறார். மனிதன் முயற்சியில் சலிக்காமல் மனஉறுதி பெற்றபிறகு, இறைவன் அவனுக்குத் திருவருள் புரிகிறார்.
- பாகவதம் தரும் நற்சிந்தனை
• இறைவன் ஒருவனே முக்காலத்திலும் இருப்பவன். இறைவனைத் தவிர சத்தியமானது வேறு எதுவுமில்லை.
- குருநானக்
• ஹே லட்சுமணா! கூடிய வரையில் மக்கள் கூட்டங்களில் கலந்துகொள்வதைத் தவிர்த்துவிடு, பரிசுத்தம் வாய்ந்த ஏகாந்தமான ஓர் இடத்தில் வாழ்ந்து வா, குறுக்குப் புத்தி கொண்ட மக்களுடன் தொடர்புகொள்ளாதே, முற்றிலும் தனிமையில் வாழ்ந்து வருவதற்கே முயற்சி செய். வேத வேதாந்தங்களை ஆராய்ச்சி செய்தும், வேத வேதாந்தங்களின் விளக்கங்களைப் படித்தும், வேத கர்மங்களைச் செய்தும் பரமாத்மஞானம் அடைவதற்கு ஆவலுடன் இரு.
- ஸ்ரீ ராமர் லட்சுமணனுக்கு வழங்கிய அறிவுரை
• உனக்கு ஒரு தீமையும் செய்யாத ஏழைகளை நீ துன்புறுத்தியது போதும். நல்லவர்கள் பொறுமையையே வலிமையாகக் கொண்டவர்கள்.
- விஷ்ணு புராணம் 
• மனம் பரபரப்படையும்போது உலக வாழ்க்கையில் பரபரப்பும் அமைதியின்மையும் ஏற்படுகின்றன. ஆகவே நம்முள் புதைந்திருக்கும் உள்ளக் கிளர்ச்சிகளையும் ஆசைகளையும் அடக்குவதாலும், பிராணாயாமம் பழகுவதாலும், அலைபாயும் மனதை அமைதி பெறச் செய்ய வேண்டும்.
- யோகவாஷிட்ட சாரம்
• சாமம், தானம், பேதம், தண்டம் ஆகிய நான்கு முறைகளைப் பின்பற்றிச் செயல் புரிந்து வெற்றி பெறலாம்.
• சாமம், தானம், பேதம் ஆகிய முறைகளைப் பின்பற்றியும் காரியம் கைகூடாதபோது, இறுதியில்தான் தண்டம் என்ற முறையைக் கையாள வேண்டும்.
- யாக்ஞவல்க்ய ஸ்மிருதி
• இரும்பிலிருந்தே துரு தோன்றினாலும், இரும்பைத் துரு அரித்துவிடுகிறது. அதுபோலவே, அறநெறி பிறழ்ந்தவனை அவனுடைய கர்மங்களே தீயகதியில் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன.
- புத்தர்
• மனமே! என் பிரபு ராமன் இருக்கும்போது, நீ வீணாக ஏன் கலங்குகிறாய்? ஸ்ரீ ராமநாமத்தைச் சொல்லிக்கொண்டே இரு! யமனும் உன்னை அணுகுவதற்கு அஞ்சுவான், நோய் நொடிகள் பறந்தோடிவிடும். அவனது திருவடிகளைப் பற்றிக்கொள். அவன் எப்போதும் உன்னுடனேயே இருப்பான். தேவர்களிடம் இருக்கும் அமுதம் சாகா வரத்தை மட்டும்தான் தரும். ஆனால், "ராமநாமம்' என்னும் அமுதம் இருக்கிறதே, அது துன்பமற்ற, "முக்தி' என்னும் பரமானந்த சுகத்தையல்லவா உனக்குத் தருகிறது! ஆதலால், எப்போதும் ராமநாமத்தைச் சொல்லிக்கொண்டே இரு. உன் சுக, துக்கங்களை அவன் பார்த்துக் கொள்வான்.''
- சமர்த்த ராமதாசர் (சத்ரபதி சிவாஜியின் குரு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT