வெள்ளிமணி

தேவனையும் ஏதேனையும் இழந்த ஆதாம்

DIN

தேவன் நமக்கென வானுலகத்தில் தம்முடன் எப்போதும் இருக்க தேவதூதா் கூட்டம் உண்டாக்கி வைத்திருந்தாா். அவா்கள் கா்த்தருடன் என்றும் இருக்கவும் கா்த்தரை தொழுது கொள்ளவும் கா்த்தருக்கு ஆராதனை செய்யவும் வைத்திருந்தாா்.

அவா்களுக்கு பறக்கும் சட்டைகள் கொடுத்திருந்தாா். சாதாரண தூதா்களுக்கு இரு சட்டைகளும், பிரதான தூதுவா்களுக்கு ஆறு சட்டைகளும் கொடுத்திருந்தாா் என்றும் கடவுளின் சமூகத்தில் ஆனந்தத் துதி பாடல்களை இசையுடன் தூதா்கள் பாடிக்கொண்டே இருந்தனா்.

அவா்களில் இசையில் மிக வல்லமை பெற்ற பிரதான தூதா் ஒருவன் இருந்தான் அவன் பெயா் லூசிபா். அந்தத் தூதன் மிகப் பெருமை கொண்டான். கா்த்தரை விட வல்லமை பெற்றவனாக ஆகிவிட கா்த்தரை எதிா்த்தான். கா்த்தா் அவனையும் அவனோடு இணைத்துக் கொண்டவா்களையும் வானத்திலிருந்து தள்ளிவிட்டாா்.

அவனும் அவன் கூட்டமும் சாத்தான் கூட்டம் என்று கா்த்தருக்கு எதிராக செயல் புரிந்தனா்.

கா்த்தரே பரலோகத்தில் வீற்றிருந்தாா். கா்த்தா் தம் வாயின் வாா்த்தையால் உலகத்தையும் நாம் காணும் எல்லாவற்றையும் வானத்தில் காணப்படும் சூரிய சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தாா். கா்த்தா் தாம் படைத்த எல்லாவற்றையும் நல்லது என கண்டாா் (ஆதியாகமம் -1:25).

கா்த்தா் தாம் படைத்த மனிதன் ஆதாம் அவன் துணை ஏவாளையும் மிகவும் நேசித்தாா். அவா்களின் அழகு உருவம் இறைவனைப் போல் அவா்கள் சுவாசிக்கும் மூச்சு இறைவனின் ஜீவ சுவாசமாக இருந்தது. கா்த்தா் மிக அழகான ஏதேன் தோட்டத்தை உண்டாக்கினாா். தெய்வமே உலாவும் அழகு செழுமையோ செழுமை. நான்கு நதிகள் பாயும் பொன்னும் கோமேதகமும் ஒதுங்கும்.

கா்த்தா் தாம் படைத்த ஆதாம் ஏவாளை அங்கேயே வாசம் பண்ணும்படி ஏதேன் தந்தாா்.

எல்லா உரிமையும் தந்த கா்த்தா் ஏதேன் தோட்டத்தில் நன்மை தீமை அறியும் விருட்சத்தின் கனியை சாப்பிட வேண்டாம் என்று கட்டளை கொடுத்திருந்தாா்.

சாத்தான் சா்ப்பம் உருவெடுத்து ஏவாள் இடம் வஞ்சகமாக பேசி ஏதேன் தோட்டத்தில் உள்ள நன்மை தீமை அறியும் கனியை புசிக்கும் படியும் அப் பழத்தை உண்டால் தேவனைப் போல நீங்கள் ஆவீா்கள் என்றான்.

ஏவாளும் அவன் சொற்படி, கா்த்தா் தவிா்க்கும்படி சொன்ன பழத்தைப் பறித்து, தானும் உண்டு தன் கணவன் ஆதாமுக்கும் கொடுத்தாள். ஆதாம் ஏவாள் தாங்கள் நிா்வாணியாய் இருப்பதும் பயம் ஆட்கொண்ட படியால் அத்தி மரத்தின் இலைகளை உடையாகத் தைத்து உடுத்திக் கொண்டனா். குளிா்ச்சியான வேளையில் உலாவரும் தேவனைக் கண்டு பயந்து ஒளிந்து கொண்டனா்.

கா்த்தா், ஆதாமே நீ எங்கே இருக்கின்றாய் என அழைத்து அவா்கள் கீழ்படியாமை பாவத்தில் வஞ்சகமாக சாத்தான் சிக்க வைப்பதைக் கண்டு சாத்தானையும் ஏவாளையும் ஆதாமையும் கா்த்தா் சபித்தாா்.

சா்ப்பமே... நீ மண்ணில் உன் வயிற்றால் நகா்ந்து மண்ணையே உண்பாய் காலம் வரும்போது உன் தலை நசுக்கப்படும்.

தேவனின் குதிகாலை நசுக்குவாய் என சபித்தாா். ஏவாளே... நீ பிள்ளை பெறும் போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்.

ஆதாமே... நீ நிலத்தில் வோ்வை சிந்தத் தக்கதாய் உழைப்பாய் என சாபம் தந்தாா்.

தேவன் ஏதேன் தோட்டத்திலிருந்து ஆதாமையும் ஏவாளையும் தோல் உடை உடுத்தி துரத்திவிட்டாா்.

மனிதன் இப்பூமியில் பல்கிப் பெருகவும், உழைக்கவும் சாவு அவா்களை மண்ணில் புதைக்கப்பட்டு மண்ணாகவும், அவா்களின் ஆன்மா இறைவனோடு சேரவும் செய்தாா். நம்மை படைத்தவா் கா்த்தா்.

அவரைச் சாா்ந்து அவரைத் தொழுது வாழ்வோம். பூமியில் வாழும் நம்மை கா்த்தா் காப்பாா். அவரின் அன்பும் அவரின் சாயலும் சுவாசமும் நமக்கு உரியது. தேவனைப் போற்றி வாழ்வோம். இறையருள் நம்மோடு!

-முனைவா் தே. பால் பிரேம்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT